மருத்துவமனை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
க.பாண்டியன்,
அண்ணா தெரு,
தெப்பக்குளம்,
மதுரை.
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
ஐயா,
பொருள்: மருத்துவமனை அமைத்துத் தர வேண்டுதல்.
வணக்கம். எங்கள் ஊரில் ஏறக்குறைய 5000 பேர் வசிக்கின்றனர். எங்களுக்கு இப்போதுள்ள மருத்துவ வசதி போதாது. தனியார் மருத்துவ மனைகள் ஒன்றிரண்டு உள்ளன. வறுமை காரணமாக ஏழையர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றால் ஊர் திரும்ப அரை நாள் ஆகிவிடுகிறது. இதனால் வேலை கெடுகிறது.
எங்கள் இடர்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் எங்களுக்கு மருத்துவமனை ஒன்றை அமைத்துத் தருமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: தெப்பக்குளம்
நாள்: 21/7/2021
தங்கள் உண்மையுள்ள,
க.பாண்டியன்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.