'பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்' குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றைஉருவாக்கி, அதனைச் செயல்படத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. (இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
முத்து,
10, ஆம் வகுப்பு,
அரசு உயர்நிலைப் பள்ளி,
விருதுநகர்.
பெறுநர்
தலைமை ஆசிரியர் அவர்கள்,
அரசு உயர் நிலைப்லைப்பள்ளி,
விருதுநகர்.
ஐயா,
பொருள்: பள்ளித் தூய்மை - செயல்திட்ட வரைவு - ஒப்புதல் வேண்டுதல் - சார்பு.
நமது 'பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்' குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதனைச் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
செயல்திட்ட வரைவு :
1)வகுப்பறைத் தூய்மை - தினமும் காலை 8.00 மணி
2)வளாகத் தூய்மை - தினமும் மாலை 5.00 மணி
3)குடிநீர்த் தொட்டி பராமரிப்பு - திங்கள், வெள்ளி
இடம்: விருதுநகர்
நாள்:17/08/2021
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
முத்து.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
தலைமை ஆசிரியர் அவர்கள்,
அரசு உயர் நிலைப்லைப்பள்ளி,
விருதுநகர்.