விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனை பாராட்டி கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
47, அண்ணா தெரு,
விருதுநகர்,
02/08/2021
அன்புள்ள முத்துக்கு,
வணக்கம். நலம். நலமே நாட்டம். நீ எழுதிய மடல் கிடைத்தது. மாநில விளையாட்டுப் போட்டியில் மூன்றில் நீ முதன்மை பெற்றது அறிந்து மகிழ்கிறேன். என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குண்டு எறிதல், பழு தூக்குதல், 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகிய மூன்றும் வலிமையை வெளிப்படுத்தும் வீர விளையாட்டுகளே. நீ ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் இரண்டாம் இடம் பெற்றமையும் மகிழ்ச்சிகுரியதே. மேலும் நன்குப் பயின்று, நீ பிற நாடுகளுக்குச் சென்று விளையாடி வெல்ல வேண்டும் என்பது எண்ணம்.
நம் நாடு விளையாட்டுப் பயிற்சியில் பின் தங்கிய நிலையில் இருப்பது வருந்துவதற்குரியது. உன் போன்ற வீரர்களால் அக்குறை நீக்கப்பட வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டி, அகில இந்திய விளையாட்டுப் போட்டி,
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் கலந்து வெற்றி குவித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்புகழ் கிடைக்க உழைக்க வேண்டுகிறேன். என் ஊக்குவிப்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
உன் அன்பு நண்பன்,
கந்தசாமி.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
முத்து,
47, அண்ணா தெரு,
விருதுநகர்.