நான் விரும்பும் கவிஞர் பாரதியார் மாதிரி-2

நான் விரும்பும் கவிஞர் பாரதியார் (மாதிரி-2) பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:

  • முன்னுரை 
  • தோற்றம்
  • நாட்டு விடுதலை
  • தேசியக்கவி
  • சமுதாயக் காவலர்

முன்னுரை:

நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தமது, உடல், பொருள், ஆவி மூன்றையும் கொடுத்த விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர், அவர்களுள் தனது உணர்ச்சி மிக்க கவிதையால், தமிழகத்தைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்தவரே நான் விரும்பும் கவிஞரான பாரதியார் ஆவார்.

தோற்றம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரத்தில் சின்னசாமி, இலக்குமி இணையருக்கு மகனாக 11.12.1882 ஆம் ஆண்டு பாரதி பிறந்தார். இளமையிலேயே பைந்தமிழ்ப் பாவலராய்த் திகழ்ந்து 'பாரதி' என்னும் பட்டம் பெற்றார்.

நாட்டு விடுதலை:

மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், சிறந்த இகழாசிரியராகவும் இருந்த பாரதி ஆங்கிலேயரின் அடிமைப்பிடியிலிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். தமது பாடலால் தூங்கிய மக்களைத் தட்டி எழுப்பி, சாதி மதப்பாகுபாடின்றி அனைவரையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார்.

தேசியக்கவி:

பாரதியாரின் துடிப்புள்ள கவிதைகள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட மக்களைத் தட்டி எழுப்பியது அனைவருமே பாரதியின் கவித்தீயில் எரிந்தனர். இதனால் அனைவராலும் தேசியக்கவி' எனப் பாராட்டப்பட்டார்.

சமுதாயக் காவலர்: 

நாட்டின் விடுதலையோடு சமூக விடுதலைக்கும் குரல் கொடுத்தவர் பாரதி.

"குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றும்,

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்றும் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்

இவை போன்ற எண்ணற்ற கவிதைகள் பாரதியார் சமூகத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட பற்றினை உணர்த்துகின்றன. 

முடிவுரை:

பாரதநாடு பார்க்கெலாம் திலகம்" என்று நாட்டின் பெருமையை விண்ணை முட்டுமளவு முழக்கமிட்டவர் பாரதி. அவர் புகழ் காப்பதே நமது தலையாய கடமையாகும்.

Related:நான் விரும்பும் கவிஞர் பாரதியார் மாதிரி-1

Post a Comment

Previous Post Next Post