இரு கிரகங்கள் ஒரு இராசியில் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே கிரகப் பலன் மற்றும் சாரத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
{tocify} $title={Table of Contents}
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருந்தால் பெண்களுக்கு வசப்பட்டவனாவன். அழகு குறைவாக இருக்கும். கபடநாடகங்களை செய்கின்றவனாக இருப்பார். மிகவும் தன முள்ளவனாவன். சாராயம் முதலிய போதைப் பொருட்களை விற்பனை செய்பவனாவன் அல்லது அதனோடு தொடர்புடையவன். காரியங்களில் நிபுணத்தன்மை உள்ளவனாவன்.
சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால்
தேஜஸ் உள்ள வனாகவும், சாகச கர்மத்தைச் செய் கின்றவனாகவும், அறிவில்லா தவனாகவும், பலமும் பராக்கிரமுமுள்ளவனாகவும், பொய் பேசுகின்றவனாகவும், அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், பாவச்செயல்களைச் செய்ய துணிபவனாகவும் மிகுந்த கோபமுடையவனாகவும் இருப்பார்.
சூரியனும் புதனும் சேர்த்திருந்தால்
நிலையில்லா தனத்தை உடையவனாகவும், நல்ல வார்த்தைகளைப் பேசுகின்றவனாகவும், கீர்த்தியை பெறுபவனாகவும், பொதுமக்களுக்கும், உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பிடித்தவனாகவும், பல வித்தைகளை கற்க ஆர்வமுள்ளவனாகவும் இருப்பார்.
சூரியனும் குருவும் சேர்த்திருந்தால்
பல தர்மங்களைச் செய்கின்றவனாகவும், மந்திரியாகவும், உறவினர்கள் மூலம் தனலாபம் கிடைக்கப்பெறுபவனாகவும், யாருக்கும் தொந்தரவு செய்யாதவனாகவும் இருப்பார்.
சூரியனும் சுக்கிரனும் சேர்த்திருந்தால்
ஆயுதங்களைப் பிரயோகிப்பதில் தலைசிறந்தவனாகவும், பலவானாகவும், வயோதிகத்தில் கண்ணிற்குப் பார்வை குறைத்திருக்கின்றவனாகவும், போர்க்களத்திற் பிரயோகிக்கும் வித்தைகளில் (மல்யுத்தம் முதலானவை) நிபுணனாகவும், பெண்கள் மூலம் தனலாபம் அடைபவனாகவும் இருப்பார்.
சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால்
தொழிலில் நல்ல சாமர்த்திய முள்ளவனயும்,தன்னுடைய கர்மத்தில் பிரியமுள்ள வனயும், மனைவிக்கும் புத்திரர்களுக்கும் ஆபத்து வரும் போது அவர்களை காப்பவனாகவும், தனது வம்சத்திற்குத்தக்க குணங்களில் சுத்தமுள்ளவனாகவும் இருப்பார்.
சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சூரனாகவும், சண்டைகளில் ஆர்வமுள்ளவனாகவும், மல்யுத்தத்தில் சாமர்த்தியமுள்ளவனாகவும், இரத்த சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவராகவும், ஓவியங்களை அறிந்தவனாகவும் இருப்பார்.
சந்திரனும் புதனும் சேர்ந்திருந்தால்
காவியம் கதை இவைகளில் அதிக சாமர்த்திய முள்ளவனாகவும், தனவானாகவும், பெண்களுக்கு பிடித்தவனாகவும், தர்ம காரியங்களை செய்ய ஆர்வமுள்ள வேறாகவும், நல்ல குணங்களை பெற்றவராகவும் இருப்பார்.
சந்திரனும் குருவும் சேர்த்திருந்தால்
உறவினர்களுக்கு உதவி செய்பவராகவும், செல்வத்தை உடையவன், ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவன், இறைப்பணி செய்பவராகவும் இருப்பார்.
சந்திரனும் சுக்கிரனும் சேர்த்திருந்தால்
நறுமணப் பொருட்கள் பயன்படுத்துவதில் விருப்பமுள்ளவன், சுத்தமான ஆடைகள் அணிவதில் விருப்பம், சோம்பேறி தனம் அதிகம் உள்ளவராகவும், கொடுக்கல் வாங்கல் அல்லது வியாபாரத்தில் திறமையுள்ளவனாகவும் இருப்பார்.
களில் (கொடுக்கல் வாங்கல் அல்லது வியாபாரத்தில்) திறமையுள்ள வனாகவும் இருப்பாள்.
சந்திரனும் சனியும் சேர்த்திருந்தால்
தன்னை விட வயது அதிகமான மனைவியை பெற்றிருப்பான், விலங்குகளை காப்பாற்றும் ஆர்வம் உள்ளவர்கள், மன சஞ்சலம் அதிகம் இருக்கும், கையில் பணம் தங்காது, சனியும் சந்திரனும் சேர்த்துக்கும் சில ஜாதகர்களின் தந்தைக்கு இரண்டு தாரம் இருக்கும். ஜாதகர் தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்திருப்பார்(பொது விதி மட்டுமே மற்ற கிரகச் சேர்க்கைகளை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்)
செவ்வாயும் புதனும் சேர்த்திருந்தால்
பெண்கள் இடம் பேசத் தெரியாது இதனால் பெண்கள் இவர்களிடம் அதிகம் நட்புடன் பழகுவதில்லை, ஆனால் விதவை பெண்களிடம் கனிவுடன் நடந்து கொள்வான், செல்வம் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சுவர்ணம் இரும்பு முதலானவைகளைக் கொண்டு தொழில் செய்கின்றவனாகவும், ஒளஷதங்களைச் செய்கின்றவனாகவும், சாமர்த்தியவானாகவும் இருப்பார்.
செவ்வாயும் குருவும் சேர்த்திருந்தால்
சிற்ப வித்தை தெரிந்தவனாகவும் வேதத்திலும் சாஸ்திரத்திலும் அறிவுள்ளவனாகவும், புத்தியுள்ளவனாகவும், வாக்கு சாமர்த்திய முள்ளவனாகவும், ஆயுதங்களை கையால தெரிந்தவனாகவும், இருப்பார்.
செவ்வாயும் சுக்கிரனும் சேர்த்திருந்தால்
சங்கத் தவைனாகவும், கணித சாஸ்திரத்தை அறிகின்றவனாகவும், சில கெட்ட எண்ணங்கள் கொண்டவனாகவும், சூது விளையாடுகின்றவனாகவும், பொய் பேசுகின்றவனாகவும், கபட தந்திரமுள்ளவனாகவும் இருப்பார்,
செவ்வாயும் சனியும் சேர்த்திருந்தால்
இந்திர ஜாலவித்தையில் தெரிந்தவனாகவும்.யாருக்கும் தெரியாமல் ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லமை பெற்றவராகவும், கஞ்சனாகவும், அதிர்ஷ்டம் குறைவாகவும், மருந்துகளை கையால தெரிந்தவனாகவும், கலகப்பிரியனாகவும் இருப்பார்.
புதனும் குருவும் சேர்த்திருந்தால்
இசையில் ஆர்வமுள்ளவன், புத்திமானாகவும், சுக முள்ளவனாகவும் இருப்பார்.கலைகளில் ஆர்வமுள்ளவன்.
புதனும் சுக்கிரனும் சேர்த்திருந்தால்
மிகவும் தன முள்ளவனாகவும், சாஸ்திரம் அறிந்தவனாகவும், நல்ல வாக்குள்ளவனாகவும், சங்கீதத்தை அறிகின்றவனாகவும், வாசனை திரவியங்களை பயன்படுத்துவதில் விருப்பம் உள்ளவனாகவும் இருப்பார்.
புதனும் சனியும் சேர்த்திருந்தால்
குணவானாவும், மிகவும் வஞ்சிக்கின்ற சுபாவ முள்ளவனாகவும், வியாபார தந்திரம் மிக்கவனாகவும்,(எந்த பொருளையும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்கும் வல்லமை), நல்ல வாக் குள்ளவனாகவும் இருப்பார்.
குருவும் சுக்கிரனும் சேர்த்திருந்தால்
வித்தைகளில் வல்லவன், வாதப் பிரதிவாதங்களைச் செய்கின்றவனாகவும், மேன்மையான தர்மங்களைக் காப்பாற்றுகின்றவனாகவும், மரியாதையோடு கூடியவனாகவும், சிறந்த மனையாளோடும் தனத்தோடும் சௌந்தரியத்தோடும் கூடியவனாகவும் இருப்பார்.
குருவும் சனியும் சேர்த்திருந்தால்
தன விருத்தியுடையவனாகவும், தன் சுற்றத்தார்,சபை,கிராமம்,சங்கம் இவைகளுக்குத் தலைவனாகவும், அனைவரிடமும் நட்புடன் பழகுபவனாகவும் இருப்பார்.
சுக்கிரனும் சனியும் சேர்த்திருந்தால்
வியாபாத்தில் சாமர்த்தியம் உள்ளவராகவும், சித்திரம் வரைவதில் நிபுணனாகவும், மண்சம்பந்தமான வேலை செய்பவனாகவும், மல்யுத்தத்தில் சாமர்த்தியம் உள்ளவராகவும் இருப்பார்.
மேற்குறிப்பிட்டுள்ள கிரக சேர்க்கையுடன் இராகு கேது சம்பந்தத்தோடு இருந்தால் அந்தப் பலன்கள் குறைவாகியா அல்லது வேறு விதத்திலோ நடக்கும்.