வங்கி கணக்கை முடிக்க வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே மொழிபெயர்ப்பு)
அனுப்புநர்
முத்து,
157/11, எழில் நகர்,
காரியாபட்டி.
பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
காரியாபட்டி.
ஐயா/அம்மா
பொருள்: வங்கி கணக்கை முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பாக.
வணக்கம் நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்----------. நான் சொந்த காரணங்களுக்காக தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கை தொடர விரும்பவில்லை. எனவே எனது வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை என்னிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:24/08/2021
இடம்: காரியாபட்டி.
இப்படிக்கு,
முத்து.
குறிப்பு:
உங்களுக்கு வேறொரு வங்கியில் வங்கி கணக்கு இருந்தால் முடித்து வைக்க கோரிய வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த வங்கி கணக்குக்கு மாற்றுமாறும் கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைக்கும் போது அந்த வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code போன்றவற்றை கடிதத்தில் சுட்டி காட்ட வேண்டும்.