தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள்

தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள்.


  1. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY) 
  2. தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) 
  3. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)  
  4. மானவாரி பகுதி மேம்பாடு (RAD)
  5. பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY)
  6. ஒருங்கிணைந்த தோட்டக்கலைத் அபிவிருத்தி திட்டம் (IHDS) 
  7. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 
  8. தேசிய ஆயுஷ் இயக்கம் - மருத்துவப் பயிர்கள் (NAM - MP)

திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்கள் 

  • ஆதார் அட்டை நகல் 
  • குடும்ப அட்டை நகல் 
  • சிறு/குறு விவசாயி சான்றிதழ்  
  • புகைப்படம்
  • நிலம் தொடர்பான ஆவணங்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்

உங்கள் பகுதி வட்டாரத்திலுள்ள

  • தோட்டக்கலை உதவி அலுவலர்.
  • தோட்டக்கலை அலுவலர் 
  • தோட்டக்கலை உதவி இயக்குநர்
{tocify} $title={Table of Contents}

1.பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY)

தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைத்தல் 

  • சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியம்.
  • இதர விவசாயிகளுக்கு 75% மானியம்

திட்ட மானியம் - ஒரு விவசாயிக்கு 5 எக்டர்

2.தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH-NHM) 

i)உயர்தர நடவு செடிகள் உற்பத்தி நாற்றங்கால் அமைத்தல் 40%-50% மானியம்.

  • உயர்தர நாற்றாங்கால் - ரூ.10.00 இலட்சம் / எக்டர் 
  • சிறிய நாற்றாங்கால் ரூ. 10.00 இலட்சம் / எக்டர் 
  • புதிய திசு வளர்ப்புக் கூடம் - ரூ. 50.00 இலட்சம் / எண்

ii)பரப்பு விரிவாக்கம் - 40% மானியம்

  • காய்கறிகள், பழ வகைகள், சுவை தாளித பயிர்கள், மலைப்பயிர்கள்
  • குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வீரிய காய்கறி நாற்றுகள்/ நடவுச்செடிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

iii)காளான் உற்பத்தி (40% மானியம்) 

  • காளான் உற்பத்தி அலகு ரூ. 8.00 இலட்சம் /எண்.
  • காளான் வித்து உற்பத்தி கூடம் - ரூ.6.00 இலட்சம்/எண்.

iv)பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல் 50% மானியம்) 

  • மா/முந்திரியில் பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் - ரூ.20,000/ எக்டர் 

v)நீர் ஆதாரங்கள் உருவாக்குதல் 50-100 % மானியம் 

  • சமுதாய நீர் தேக்கங்கள் ரூ.20.00 இலட்சம்/எண். 
  • தனி நபருக்கான நீர் சேமிப்பு அமைப்பு - ரூ.75,000/எண் . 

vi)பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி 50 % மானியம்  

  • பசுமைக்குடில் - ரூ. 467.50/ச.மீ,ஒரு பயனாளிக்கு 4000 ச. மீ. வரை 
  • நிழல்வலைக்குடில் - ரூ.355 |ச.மீ, ஒரு பயனாளிக்கு 4000 ச. மீ. வரை  
  • பறவை தடுப்பு வலை - ரூ.17. 50/ச.மீ ஒரு பயனாளிக்கு 5000 ச.மீ. 
  • பிளாஸ்டிக் நிலப்போர்வை - ரூ.16,000/எக்டர், ஒரு பயனாளிக்கு 2 எக்டர்

vii)ஒருங்கிணைந்த பர மேலாண்மை 30% மானியம்.

  • நுண்ணூட்ட உரம்- ரூ. 500/எக்டர் 

viii)தேனீ வளர்ப்பு பாக்குவித்தல் (40 % மானியம்)

  • தேனீக்களுடன் தேனிப் பெட்டிகள் - ரூ.1,600/எண்
  • தேன் பிழிந்தெடுக்கும் கருவி - ரூ.8,000/எண்

ix)இயந்திரமயமாக்கல் 125 - 40% மானியம் 

  • டிராக்டர்-20 PTO HP வரை ரூ.75,000/எண் .
  • பவர் டில்லர்- 8 BHPக்கு மேல் -ரூ.60,000/எண் 
  • பவர் டில்லர்- 8 BHPக்கு கீழ் - ரூ.40,000/எண் 
  • டிராக்டரில் இணைக்கப்பட்ட தெளிப்பான் - ரூ.8,000/எண் 
  • விசைத்தெளிப்பான் (12-16 லிட்டர்) ரூ.3,000/எண் 
  • கைத்தெளிப்பான்- ரூ.500/எண் 
  • விசைத் தெளிப்பான் (8 12 லிட்டர்) ரூ.2,500/எண்

x)அறுவடை பின் செய் மேலாண்மை( 35 - 50 % மானியம்) 

  • சிப்பம் கட்டும் அறை (9மீ*6மீ) ரூ.2.00 இலட்சம்/ அலகு
  • முன் குளிர்விப்பு அலகு (6மெடன்) ரூ.8.75 இலட்சம்/ அலகு
  • வெங்காய சேமிப்பு கூடம் (25மெடன்) - ரூ.87,500/ அலகு
  • ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை (9மீ x18மீ) ரூ.17.50 இலட்சம்/ அலகு.
  • குளிர்பதன சேமிப்பு கிடங்கு வகை 1 - ரூ.2800/மெ.டன்.
  • குளிர்பதன சேமிப்பு கிடங்கு வகை II -ரூ.3500/ மெ.டன் 
  • ஒருங்கினைந்த குளிர் தொடர் சங்கிலி அமைப்பு - ரூ.2.10 கோடி / அமைப்பு 
  • பழுக்கவைக்கப்படும் அறை -ரூ.35,000/ மெ.டன் 
  • குளிரூட்டப்பட்ட வாகனம் - ரூ.9.10 இலட்சம்/எண்

xi)விவசாயிகள் பயிற்சி - உள்மாநில /வெளிமாநில பயிற்சி 

xii)சந்தை உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துதல் -(35% மானியம்) 

  • சில்லறை விற்பனை மையங்கள் - ரூ.5.25 இலட்சம் /எண் 
  • நகரும் விற்பனை வண்டி - ரூ.15,000/எண் 

xiii)பண்ணைக் குறைகளை நிவர்த்தி செய்தல் - 50% மானியம்) 

  • ஒரு விவசாயிக்கு ரூ.2,000/- வரை வழங்கப்படுகிறது.

3.தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)

I)வாழைத்தார் உறை வழங்குதல் - ரூ12500/எக்டேர்

ii)தோட்டக்கலைபயிர்களுக்கு புத்தியிருட்டுதல் 
  • பழவகைகள்- ரூ.30000 எக்டர் 
  • காய்கறிகள் - ரூ.1500லோக்டர் 2 
iii)வெங்காய அபிவிருத்தி திட்டம்
  • வெங்காய சாகுபடி - ரூ.2000எக்டேர்  
  • வெங்காய சேமிப்பு கிடங்கு ரூ.3500 மெடன்
iv)சூழல் அடிப்படையிலான பூச்சி மேலாண்மை திட்டம்

  • வெளிச்சப் பொறிகள் - ரூ.4000/எக்டர் 
  • இனக்கவர்ச்சிப்பொறிகள் / மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள் - ரூ.1200/எக்டர்
v)அறுவடைக்கான அலுமினிய ஏணிகள் -
ரூ.10000/பயனாளி 
vi)பிளாஸ்டிக் கூடைகள் ரூ.3750/10 எண்கள் 
vii)நடவுப்பொருட்கள் வழங்குதல் - ரூ.1250/எக்டேர்.
viii)மூலிகை தோட்டத்தளைகள் - 2 தளைகள் /குடும்பம் 
ix)காய்கறி தோட்டத்தளைகள் - 6 தளைகள் / குடும்பம் 
x)பசுமைக்குடில் - ரூ.467.50/சமீ அதிகபட்சமாக 4000சமீ
xi)நிழல்வலைக்குடில் - ரூ.355/சமீ அதிகபட்சமாக 4000சமீ

3)மானவாரி பகுதி மேம்பாடு (RAD) 

I)தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் ரூ.25000/ எக்டர் 

ii)பசுமைக்குடில் ரூ.467.50/ச.மீ ஒரு பயனாளிக்கு 4000ச.மீ) 

iii)மண்புழு உரம் உற்பத்தி

  • நிரந்தர மண்புழு உர உற்பத்திக் கூடம் ரூ.50,000/கூடம்.
  • மண்புழுப் படுக்கை - ரூ.8,000 படுக்கை 
iv)அறுவடை பின்செய் சேமிப்பு உங்கு மற்றும் பதிப்பு கட்டுதல் - ரூ.2 இலட்சம்/அலகு 

v)ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்
விவசாயிகளுக்கு பயிற்சி & செயல்விளக்கம் - ரூ.20,000/குழு

4)பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (PKVY)

  • தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் நடைமுறை படுத்த 50 ஏக்கர் கொண்ட இயற்கை வேளாண்மை விவசாய குழுக்கள் அமைத்தல் 
  • பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் மற்றும் தரக்கட்டுப்பாடு 
  • இயற்கை வேளாண்மைக்கான செயல்திட்டம் 
  • ஒருங்கிணைந்த உர மேலாண்மை 
  • வேளாண் கருவிகள் வாடகை மையம் 
  • சிப்பம் கட்டுதல், உற்பத்தி பொருள்களுக்கு பெயரிடுதல் மற்றும் வர்த்தகம் செய்தல்.

5)ஒருங்கிணைந்த தோட்டக்கலைத் அபிவிருத்தி திட்டம்(IHDS)

  • காஞ்சிபுரம், கரூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல், திருவண்ணாமலை, திருவரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
  • நடவுச் செடிகள் மற்றும் வீரிய ஒட்டு ரக காய் விதைகள் - 40 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

6)பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 

அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்கள்

வாழை, மரவள்ளி, மஞ்சள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய்

நிவாரணம் பெறும் நிலைகள்
  • விதைப்பு நடவு செய்ய இயலாமை 
  • விதைப்பு செய்து முளைப்பு பாதித்தல் 
  • இடை பருவ கால இடர்பாடுகள் 
  • அறுவடைக்குப் பின் ஏற்படும் பாதிப்பு 
  • பகுதி சார்ந்த இடர்பாடுகள் 
  • மகசூல் இழப்பு பாதிப்பு.

7)தேசிய ஆயுஷ் இயக்கம் - மருத்துவப் பயிர்கள் (NAM-MP) 

இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள மாவட்டங்கள்

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம்.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ள மானியம்
  • கண்வலிக்கிழங்கு சாகுபடி 50 சதவீத மானியம் ரூ.1,10,722/எக்டர்.
  • செம்மரம் சாகுபடி - 75 சதவீத மானியம் ரூ.68,245/எக்டர்.
  • திப்பிலி சாகுபடி - 30 சதவீத மானியம் ரூ.30,197/எக்டர்

8.தேசிய ஆயுஷ் இயக்கம் - மருத்துவப் பயிர்கள் (NAM-MP)

  • மணத்தக்காளி சாகுபடி 30 சதவீத மானியம் ரூ.12,078/எக்டர் 
  • இலவங்கப்பட்டை சாகுபடி - 30 சதவீத மானியம் ரூ.37,444/எக்டர் 
  • வேம்பு சாகுபடி 30 சதவீத மானியம் ரூ.18,118/எக்டர்.
  • வல்லாரை சாகுபடி 30 சதவீத மானியம் ரூ.19,326/எக்டர்
  • சோற்றுக் கற்றாழை சாகுபடி - 30 சதவீத மானியம் ரூ.20,534/எக்டர்.
  • முருகல் மரம் சாகுபடி 30 சதவீத மானியம் ரூ.30,197/எக்டர் -

Post a Comment

Previous Post Next Post