ஜாதகர் பிறந்த கரணங்களுக்கான பலன்கள்

ஜாதகர் பிறந்த கரணங்களுக்கான பலன்கள்:

கரணங்கள் மொத்தம் பதினொன்று இந்த பதினொரு கரணங்களிலும் பிறந்தவர்களுக்கான பலன்கள்.  

பவம் கரணத்தில் பிறந்தால்:

கரணத்தில் பிறந்தவர் செல்வந்தர், ஆச்சார அனுஷ்டங்களை கடை பிடிப்பவர். சுகவாசி,மந்த சுபாவம் கொண்டவர்.       

பாலவம் கரணத்தில் பிறந்தால். 

புகழ் உடையவர், முயற்சியுடையவர்.  

கௌலவம் கரணத்தில் பிறந்தால்:

நல்லொழுக்கம் உடையவர், வீர செயல்கள் செய்ய கூடியவர். அனைத்து பாக்கியங்களும் நிறைய பெற்றவர்.  

தைதுலை கரணத்தில் பிறந்தால்:

அழகானவர், தர்மவான், பெரிய மனிதர்களை அண்டியிருப்பவர். மென்மையாக பேசுபவன், இசை கலைஞன், சுகவாசி.  

கரஜை கரணத்தில் பிறந்தால்

மக்கள் தலைவன், அச்சமற்றவன், பகைவர்களை வெல்பவன், அரசர்களுக்கு ஆலோசனை சொல்பவன்.  

வணிஜை கரணத்தில் பிறந்தால்

படித்தவர், சாமர்த்தியசாலி, அன்பானவர்,செல்வந்தர். 

பத்ரை கரணத்தில் பிறந்தால்

பயமற்றவன், சபலகுணம் உடையவன், தன்னிஷ்டப்படி நடப்பவன். 

சகுனி கரணத்தில் பிறந்தால்

செல்வந்தன், வருங்காலத்தை உணர்ந்தவன், பிறருக்கு கெடுதல் செய்பவன்.  

சதுஷ்பாதம் கரணத்தில் பிறந்தால் 

நிலையற்ற புத்தி உடையவன், கொடூரமாக பேசுபவன், நோயாளி.           

நாகவம் கரணத்தில் பிறந்தால்

வித்வான், கோபம் உடையவன், குறைவாக சாப்பிடுபவர்க

கிமஸ்துக்னம் கரணத்தில் பிறந்தால்

சுகவாசி, நகைச்சுவை உணர்வு மிக்கவர், ஒரு செயலை செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்.

Post a Comment

Previous Post Next Post