லக்னாதிபதியும் திருமண பொருத்தமும்

லக்னாதிபதியும் திருமண பொருத்தமும்

ஆணின் இலக்னாதிபதியும் பெண்ணின் இலக்னாதிபதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வாறு உள்ளனர் என்று பார்ப்பது மிகவும் இன்றியமையாதது.

ஆணின் லக்னாதிபதி பெண்ணின் லக்னத்தில் இருந்தாலும் பெண்ணின் லக்னாதிபதி ஆணின் லக்னத்தில் இருந்தாலும் சிறப்பு. நல்ல புரிதல் இருக்கும். ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் எப்படி இருந்தாலும் சரி

2 ம் வீட்டில் இருந்தால் நட்பு வீடாக இருந்தால் குடும்ப பொறுப்பை ஏற்பார். பகையாக இருந்தால் இவரே குடும்பத்திற்கு பாரமாக இருப்பார்

3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியத்துடன் சகோதர பாசத்தோடு பழகுவார்

4 ம் இடத்தில் இருந்தால் தாய்மை உணர்வோடு பழகுவார்

5 ம் இடத்தில் இருந்தால் குழந்தை தனமாக நடந்து கொள்வார் சில சமயம் எரிச்சலாகவும் சில சமயம் ஆனந்தமாகவும் இருக்கும்

6 ம் இடத்தில் இருந்தால் இவரே எதிரியைப்போல் செயல்படுவார்

 7 ம் இடத்தில் இருந்தால் நல்லவரா கெட்டவரா என்பதை கண்டு பிடிப்பதே சிரமம்.

8 ம் இடம் கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இருவருக்கும் 8 ம் இடத்தில் இருக்கும் கிரகம் தசாபுத்தி திருமண காலத்தில் இல்லாமல் பார்க்க வேண்டும்.

9 ம் இடம் நல்லது. திருமணத்திற்கு பின் பாக்யம் சேரும்

10 ம் இடம் சிறப்பு. கௌரமாக அவரவர் குறைகளை புரிந்து அனுசரனையாக இருப்பார்கள்

11 ம் இடத்தில் இருந்தால் நல்ல மனநிறையுடன் வாழ்வார்கள்

12 ம் இடத்தில் இருந்தால் அந்த கிரகம் இருக்கும் ஆதிபத்ய நிலை பொருத்து முதலீடா அல்லது விரயமா என்று தீர்மானம் செய்யலாம்

Post a Comment

Previous Post Next Post