ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால்:
பொதுவாக 8 ல் சந்திரன் உள்ள ஜாதகர் அசாதியமான குணப்படுத்துதல் திறமை கொண்டவர், இவர்கள் மசாஜ், அல்லது கைகளால் குணப்படுத்துதல் கலையை கற்று மற்றவருக்கு உதவலாம், இது கூடுதல் வருமானதுக்கும் வழிவகை செய்யும், மன நல ஆலோசகர், உளவியல் நிபுணர், குணப்படுத்துதல், துப்பறிவாளர், உயரிய தந்திரீக நிபுணர்கள் போன்றவர்களுக்கு 8 ல் சந்திரன் நிப்பதை காண முடிகிறது.
8 ல் சந்திரன் நின்ற ஜாதகர்களை மர்மமானவர்கள், அல்லது எதார்த்தத்தில் இருந்து நீண்ட தூரம் விலகி சென்றவர்களாக வெளியில் தெரிவார்கள், 8 ல் சந்திரன் நின்ற ஜாதகருக்கு மறைவில் உள்ள விஷயங்களை பற்றிய தேடல், இறப்பை பற்றிய தேடல் மற்றும் மறை ஞான தேடல்கள் இருக்கும், இவர்களுக்கு அசாதியமான ஆன்மீக ஆற்றலும், தாந்திரீக ஈடுபாடுகளும் இருக்கும், பொதுவாகவே இவர்களுக்கு தொழில்நுட்பம் அல்லது வினஞானத்தால் ஏற்கபட்ட விஷயங்களில் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம் இருக்கும், இவர்களுக்கு லாஜீக் அவசியமில்லை மற்றவர் எவ்விதத்தில் இவர்களை திருப்தியடைய செய்கிறார்கள் என்பதையே இவர்கள் அதிகம் பார்ப்பார்கள்.
பொதுவாகவே 8 ல் சந்திரன் நின்ற ஜாதகருக்கு 6 ம் அறிவு அதிகம் வேலை செய்யும், இதன் காரணமாக இவர்கள் அசாதியமான நிகழ்வுகள் நடந்ததாகவும், அல்லது கனவு கண்டதாகவும், உள்உணர்வு தெரிவித்ததாகவும் கூறுவதை பலர் ஏற்றுகொள்ள மாட்டார்கள் இவர்கள் கூறுவது பொய் என்று குற்றம்சாற்றுவார்கள், இவர்கள் தங்களது இருண்ட சிந்தனைகளை வெளிபடுத்திவிடுவார்கள் இதனாலேயே மற்றவர்களால் அந்நியமாக அல்லது மர்மமாக பாரக்கபடுவார்கள், 8 ல் சந்திரன் நின்றவர் இறப்பை கண்டு அஞ்சுபவரில்லை அதனால் அதனை பற்றி சர்வசாதாரணமாக உரையாடுவார்கள், சில வேளைகளில் இதுவே இவர்களை மற்றவர்கள் முன் தைரியமானவர்களாக வெளிபடுத்திவிடும், இதன் காரணம் இவர்கள் இறப்பதற்க்கு தயாராக உள்ளார்கள் என்று பொருள்க்கொள்ளக்கூடாது, வாழ்க்கையே ஒரு பரிசு தான் என்பதை முழுதாக உணர்ந்தவர்கள் என்பதால் தான் இவர்கள் இவ்விதம் இறப்பை பற்றி சகஜமாக உரையாடுகிறார்கள்.
பொதுவாகவே 8 ல் சந்திரன் நின்றவர்கள் தங்களது சூழ்நிலையால் எளிதில் ஆட்கொள்ளபட்டு கவலைக்கு உள்ளாவார்கள், அதே நேரத்தில் அதனை ஓரளவுக்கே வெளிபடுத்திக்கொள்வார்கள், ஏனெனில் இதுவே அவர்களது சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் 8 ல் சந்திரன் நின்ற ஜாதகர், 8 ல் சந்திரன் பரம்பரையாக பெண்களுக்கு இருக்கும் ஜாதகருக்கு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும், நல்லதோ கேட்டதோ இவர்களது தாய் இவர்களை நடத்தும் விதத்தால் கடுமையாக பாதிக்கபடுவார்கள், சில நேரங்களில் இவர்களது முன்னோர்களால் இவர்கள் ஆட்கொள்ளபடுவார்கள், அதாவது முன்னோர் ஆவிகள் இவர்களை துன்புறுத்தும், இவர்களது முன்னோர்களில் ஒரு பெண் ஆன்மீகத்தில் அல்லது ஒரு ஹீலராக அல்லது தலைவியாக இருந்திருப்பார், 8 ல் சந்திரன் இருக்கும் ஜாதகருக்கு வாழ்க்கை மோசமாகும் பொழுது உதவி கிடைப்பது மிகுந்த கடினமாக இருக்கும், இவர்கள் தங்களை ஆசுவாசபடுத்திக்கொள்ள வேண்டும், இவர்களுக்கு எழும் உந்துதலை இவர்கள் புரம்தள்ள வேண்டும், இவர்கள் தனது ரகசியம் மற்றும் உணர்வுகளை மிகுந்த கவனமாகவே பகிர்ந்துகொள்வார்கள், எல்லோரிடமும் வெளிபடுத்த மாட்டார்கள், இவர்கள் வாழ்க்கையில் அதிக தோல்விகளையும், முதுகில் குத்துபவர்களையும் பார்த்தவர்கள், இவர்கள் தங்களது நண்பரிடம் ஒரு விஷயத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள சொன்னால் அந்த வார்த்தையில் அவரது நண்பர் நிற்க வேண்டும் என்று எதிரபார்பார், அதே போல இவர்களுக்கு மற்றவர் யாரிடத்திலும் பகிர்ந்து கொள்ளாத விஷயத்தை இவர்களிடம் பகிர்வதாக தெரிந்தால் அதனை இவர்கள் மிகவும் ஸ்பெஷலாக உணர்வார்கள், இவர்கள் மற்றவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தனித்தன்மையை மிகவும் மதிப்பார்கள், பொதுவாகவே 8 ல் சந்திரன் நின்றவர் அவ்வளவு எளிதில் மற்றவர்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு நன்றாக தெரியும் அவர் மிகவும் உணர்ச்சிகரமானவர் என்று, இவர்கள் பாசம் வைத்தவர் மீது அதீத பற்றை வெளிபடுத்துவார்கள், பொதுவாகவே சந்திரன் 8 ல் நின்ற ஜாதகருக்கு மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகள் அமையும், அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் ஏன் இவ்வித சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நிலை வந்தது என்று, ஆனால் இது அவர்களது வளர்ச்சிக்கும் உதவும்.