மொழிபெயர்ப்பு கலை என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்
- முன்னுரை
- தமிழ் இலக்கியவளம்
- பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
- கல்வி மொழி
- அறிவியல் கருத்துகள்
- பிறதுறைக் கருத்துகள்
- தமிழக்குச் செழுமை
- முடிவுரை
முன்னுரை
அறிவு என்பது பொதுவுடமை. அது அனைத்து மொழிக்கும் உரியது. அவ்வகையில் பலமொழிகளில் காணப்படுகின்ற அறிவுக் களஞ்சியங்களாகிய இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அழகு சேர்ப்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்!
தமிழ் இலக்கியவளம்
உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். அது இன்றளவும் செம்மையாக விளங்கி வருகிறது. அதற்கு அதன் இலக்கிய வளமே காரணமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரையில் தமிழில் எண்ணிக்கையில் அடங்கா இலக்கியங்கள் உள்ளன.
பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
ஒரு மொழியில் தோன்றிய இலக்கியங்கள் அம்மொழியில் மட்டும் இருந்துவிடின் சிறப்பில்லை. அவ்விலக்கியங்கள் பல்வேறு நாட்டு மக்களையும் சென்றடையும்போதுதான் மேலும் அது சிறப்படைகிறது. ஜெர்மன் மொழியில், மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமான ஷேக்ஸ்பியர் இந்நாட்டு படைப்பாளர்களைப் போலவே கொண்டாடப்படுகிறார். நேரடி மொழிபெயர்ப்பாக பிரெஞ்சு, ஜெர்மனி, அமெரிக்கா, லத்தீன் முதலான நாடுகளில் நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன
கல்வி மொழி
மொழிபெயர்ப்பை ஒரு கல்வியாக ஆக்குவதன் மூலம், அனைத்து உலக அறிவையும் நாம் எளிதாக பெறமுடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வெளிநாட்டவரை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே வேண்டிய அனைத்தையும் தமிழ் மொழியின் சொல் வளத்தைக் கொண்டு உருவாக்கிக் கொள்ள முடியும். மனிதவளத்தை முழுமையாக பயன்படுத்த முடியும்.
வேலைவாய்ப்பு தளத்தை விரிவாக்க முடியும். நாடு, இனம், மொழி எல்லைகளை கடந்து ஓர் உலக தன்மையை பெறமுடியும், பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் பிற மொழிகளின் இலக்கியங்களை மொழி பெயர்ப்பின் மூலம் எளிதில் பெற முடியும்,
அறிவியல் கருத்துகள்
ஒரு சிறு நாட்டில் உள்ள ஒருவர் ஒரு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பை நிகழ்த்துவார். அது மனித குலத்திற்கு அவசியமான அது பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கும்போதுதான் எல்லோருக்கும் அவ்வகையில் இன்று மொழிபெயர்ப்பின் மூலம் எண்ணிலடங்கா றிவியல் கருத்துக்கள் தமிழ்மொழியில் காணப்படுகின்றன.
பிறதுறைக் கருத்துகள்
மொழிபெயர்ப்பு நாடுகளையும் காலங்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாக இருக்கிறது. காலத்தால், இடத்தால், மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது. இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியன வேற்று மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களிடமும் சென்றடைகிறது. உலகமொழி பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
தமிழக்குச் செழுமை
தமிழ் இன்று செழுமையான மொழியாக இருபதற்குக் காரணம் அது கணினி மொழியாக உள்ளதும் மொழிப்பெயர்ப்புகள் மிகுதியாக உள்ளதுமே காரணங்கள் ஆகும்.
முடிவுரை
இன்று மொழிபெயர்ப்புக் கலையானது செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்து நம் தமிழருக்கும் அது பெருமை சேர்க்கிறது.