மாநில அளவில் நடைபெற்ற' மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
பாரதியார் நகர்,
விருதுநகர்.
10/10/2021.
அன்பு நண்பனே!
முதலில் உமக்கு எம் வாழ்த்துகள்! சென்ற வாரம் நடந்த மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றமமையைக் கண்டு வியந்தேன். பாராட்டுகள்!
பள்ளியில் நடைபெறும் கட்டுரைப் போட்டியிலேயே பொருள் பொதிந்த உன் கட்டுரையும், அதில் உன் மொழிநடையையும் பற்றி நம் ஆசிரியர்கள் வியந்ததை கூறியதை எண்ணி இப்போதும் நான் நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன். உன் கையெழுத்து உன் தலையெழுத்தை மாற்றும் என்று முன்பு நான் நினைத்ததை இந்த ஒரு நிகழ்விலேயே நிரூபித்து விட்டாய்! விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதையும் நீ மெய்ப்பித்துவிட்டாய்!
நீ உன் முயற்சிக்கு தகுந்த பரிசினை, இப்போது பெற்றுள்ளதைப் போலவே இன்னும் பல நிலைகளில், பல பரிசுகளைப் பெற நான் மனதார வாழ்த்துகிறேன். உன் இக்கட்டுரைப் பணி தொடரட்டும்!
என்றும் அன்புடன்
முத்து