மரம் நடு விழாவுக்கு நன்றியுரை

பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற மரம் நடு விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றியுரை.

நன்றியுரை

எம் பள்ளியின் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!

எம் அழைப்பிற்கிணங்க. பல அலுவல்களுக்கு மத்தியிலும் தன் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கித்தந்து. இவ்விழாவை சிறப்பு செய்து கொண்டிருக்கும் வனச்சரக அலுவலர் அவர்களுக்கு எம் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதுமட்டுமின்றி, மரம் நடுவதற்குத் தேவையான மரக்கன்றுகளைத் தந்து உதவியதற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் பெற்றோர்களுக்கும், எம்மை ஊக்குவித்த தலைமை ஆசிரியர்க்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் அமைதி காத்த நண்பர்களுக்கும் எம்பசுமைப் பாதுகாப்புப்படை சார்பாக நன்றி மலர்களைக் காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.

இயற்கையை நேசிப்போம் ! மரங்களைப் பாதுகாப்போம் !

நன்றி! வணக்கம்!

தன்னம்பிக்கை + விடாமுயற்சி + தொடர்பயிற்சி = வெற்றி நிச்சயம்

Post a Comment

Previous Post Next Post