உலகில் சுவாசிக்காமல் எந்த உயிராலும் வாழ முடியாது.அத்தகைய சுவாச ஓட்டத்தையும் அதன் பலன்களையும் அறியலாம்.
இனி நாசித் துவாரங்களில் சுவாசம் எதில் ஓடுகிறது என்பதை வைத்து அதன் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
வளர்பிறை பிரதமையான முதல் நாளில் சுவாச மானது இடது நாசியில் ஓடாமல் வலது நாசியில் ஓடினால் உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும். சண்டை சச்சரவுகள் ஏற்படும். பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
அதுபோலவே தேய்பிறை பிரதமையாகிய முதல் நாளில் உதயத்தில் வலது நாசியில் சுவாசம் ஓடாமல் இடது நாசியில் ஓடினால் உடலில் வலது பகுதியில் ஏதாவது சுகவீனங்கள் ஏற்படும். பலவித சிரமங்கள் ஏற்படும்.
சுவாசமானது தொடர்ந்து ஒரே கலையில் விடாமல் ஓடிக் கொண்டிருக்குமானால் குடும்பத்தில் ஏதாவது எதிர்பாராத கெடுதல்கள் வரலாம். அல்லது உறவினர் மரணம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்படும். இதுபோல் இடைவிடாது
ஒரே நாசித் துவாரத்தில் சுவாசம் நடைபெறுமானால் ஏதாவது பெரிய ஆபத்துக்கள், பிரச்சினைகள் ஏற்படலாம்.
இடது நாசியில் சுவாசமானது விடாமல் ஒன்றரை மணி நேரம் ஓடினால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.
இடது நாசியில் 3 மணி நேரம் சுவாசம் விடாது ஓடிக் கொண்டிருந்தால் பல நல்ல காரியங்கள் நடக்கும்.
இடது நாசியில் 6 மணி நேரம் சுவாசம் இடைவிடாது ஓடினால் தொழில், வியாபார விருத்தி, பல நல்லவர்கள் நட்பு, வசதிகள் எல்லாம் கிடைக்கும்.
ஒருநாள் முழுவதும் இடது நாசியில் சுவாசம் ஓடிக் கொண்டிருக்குமானால் பெரும் அதிர்ஷ்டம், தனப் பிராப்தி கிடைக்கும்.
இதுபோல இடது நாசியில் சுவாசம் எவ்வளவு அதிக நாட்கள் ஓடுகிறதோ அதுபோல நல்ல பலன்கள், தொழில்கள் விருத்தி, சுப காரியங்கள் நடைபெறுதல், குடும்பத்தில் நல்ல உறவு, பூமி, வீடு வாங்குதல், புதிய தொழில்கள், வியாபாரம் ஆரம் பித்தால் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
வலது நாசியில் சுவாசமானது சூரிய உதயத்தில் ருந்து பல மணி நேரம், பல நாட்கள் ஓடினால் அக்காலங்களில் நல்ல பலன்கள் நடக்காது. கெடுதல்கள்தான் விளையும்.
ஆதலால் இப்படிப்பட்ட சமயங்களில் சுவாசத்தை இடது நாசிக்கு மாற்றிக் கொண்டால் நல்ல பலன்களை அடையலாம்.