புனர்பூ தோஷம் பற்றிய முழு விளக்கம்

புனர்பூ தோஷம் பற்றி இப்போது நாம் காண்போம்.

சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகு கேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் ராகு, கேது. செவ்வாயுடன் சம்மந்தப்படும் போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக விளங்குவார்

சனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் உண்டாகிறது ஒரே ராசி யில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது சனி யின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, கிழமை, தேதிகள் மூலம் சனிசந்திரன் தொடர்பு ஏற்படுவது எல்லாமே எதிர்பாராத விதமாக நடக்கும்

மன சஞ்சலம், சபலம் மிகுந்திருக்கும் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஆளுக்கு தகுந்தாற்போல், இடத்திற்கு தகுந் தாற்போல் குண இயல்புகளை சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வார்கள் முயற்சி செய்யும் போது முடியாது, நடக்காது என்று நினைத் தால் அப்படியே நடந்து விடும். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திரும ணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும் சிலருக்கு நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும்.

வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுயபச்சாதாபம், ஆற்றாமை, தற் கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்து இன்றன சந்திரன் ராகு அல்லது சந்திரன் கேது கூட்டணியுடன் சனி, புதன் சம்பந்தப் படும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு விடும்

குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்க புனர்பூ உதவும். இத்தோஷம் குற்றங்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். புலனாய்வு துறையில் இருப்பவர்களுக்கு இத்தோஷம் இருந்தால் அத்துறையில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள். 

Post a Comment

Previous Post Next Post