ஜாதகரின் தந்தையார் எப்படிப்பட்டவர்? | பிருகு நந்தி நாடி ஜோதிடம்

நாடி ஜோதிடத்தில் சூரியனுடன் சேரும்  கிரகங்கள் மூலம் தந்தையின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சூரியன் சந்திரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் தந்தையார் சலன புத்தியுடையவர், பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும். 

சூரியன் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர். 

சூரியன் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் புத்திசாலியாக இருப்பார். சொந்தமாக நில புலன்கள் இருக்கும்,வாக்கு வன்மையுடையவர்,வியாபார நோக்கமுள்ளவர், கலகலப்பானவர். 

சூரியன் குரு சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் நல்ல குணங்களையுடையவர். இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். 

சூரியன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் செல்வந்தராக இருப்பார். பெண்கள் மீது மோகமுள்ளவர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகருக்கு புத்திர தோசம் உண்டு. 

சூரியன் சனீஸ்வரர் சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கும் அவருடைய தந்தையாருக்கும் ஒத்துப்போகாது. 

சூரியன் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு.ஜாதகருக்கு கண் நோய் வரும். 

சூரியன் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஜாதகரின் தந்தையார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரு

Post a Comment

Previous Post Next Post