கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலன்கள்

கேது பகவானுடன் மற்ற கிரகங்கள் சேரும் போது அதன் மூலம் எந்த மாதிரியான விளைவுகள் நமக்கு ஏற்படும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம். 

விளைவுகளை முன்கூட்டியே நாம் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நாம் எப்படி நம்முடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில்  பார்க்கலாம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் வேத ஜோதிடத்தில் கேது பகவானுடன் கிரகங்கள் இணைந்தால் அந்த கிரக காரத்துவங்கள் கெட்டுவிடும் என்று சொல்வார்கள் அப்படி எல்லாம் கிடையாது.கேது பகவான் நாம் முன்ஜென்மத்தில் எந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் நம்முடைய கடமைகளையும் செயல்பாடுகளையும் ஒழுங்கா நிறைவேற்றாமல் தவறி இருக்கிறோமோ அதுஎல்லாம் இந்த ஜென்மத்தில் கேது பகவான் கட்டுபாட்டுக்குள் சென்றுவிடும்.

அதாவது நம்முடைய ஜாதகத்தில் கேது பகவானுடன் எந்த கிரகங்கள் எல்லாம் இணைந்து இருக்கின்றதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் நாம் முன்ஜென்மத்தில் நம்முடைய கடமைகளையும் செயல்பாடுகளையும் ஒழுங்கா நிறைவேற்றாமல் இருந்திருக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் கேது பகவானுடன் எந்த கிரகங்கள் எல்லாம் இணைந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்களை நாம் வெறும் கடமைக்காகவும் கடனுக்காகவும் தான் செய்வோம்.

மேலும் கேதுவுடன் எந்த கிரகம் எல்லாம் இணைந்து இருக்கிறதோ அந்த கிரக உறவுக்கார காரகதுவத்திற்கு நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் எவ்வளவுதான் அவர்களுக்காக நம்முடைய பாசத்தைக் காட்டினாலும் அதற்கான ஒரு மரியாதையும் அங்கீகாரமும் எப்போதுமே அவர்களிடம் இருந்து நமக்கு வரவே வராது.ஏனென்றால் நாம் முன்ஜென்மத்தில் அந்த கிரக உறவுக்கார கத்துவத்திற்கு நம்முடைய செயல்பாடுகளையும் நம்முடைய கடமைகளையும் ஒழுங்காக சரிவர நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

மேலும் கேதுவுடன் ஜாதகத்தில் எந்த கிரகம் எல்லாம் இணைந்து இருக்கிறதோ அதை நாம் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்.

இப்போது நம்முடைய ஜாதகத்தில் கேது பகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் அதன் மூலம் எந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு வரும் என்பதை பற்றி ஒவ்வொரு கிரகமாகப் பார்க்கலாம்.

1)குரு ,கேது சேர்ந்திருந்தால்

யாருடைய ஜாதகத்தை எல்லாம் குரு கேது சேர்க்கை இருக்கின்றதோ அவர்கள் முன் ஜென்மத்தில் நியாய தர்மம் சார்ந்த விஷயங்களிலும் குழந்தைகள் சார்ந்த விஷயங்களிலும் வருமானம் சார்ந்த விஷயங்களிலும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் நாம் நம்முடைய கடமைகளையும் செயற்பாடுகளையும் ஒழுங்காக முன் ஜென்மத்தில் நிறைவேற்றாமல் இருந்திருக்கிறோம் என்று அர்த்தம்.

அதாவது யாருடைய ஜாதகத்தில் எல்லாம் (குரு, கேது) சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் சம்பந்தமே இல்லாமல் கோவில் சம்பந்தப்பட்ட பணிகளை எடுத்து செய்வது, கோயிலுக்கு நன்கொடை கொடுப்பது,கோவில் கும்பாபிஷேகம் சார்ந்த விஷயங்களிலும் கோவில் திருப்பணி சார்ந்த விஷயங்களிலும் நன்கொடை கொடுப்பது அல்லது இது சார்ந்த விஷயங்களை இவர்களே முன்னெடுத்து செய்வது.

இது போன்ற விஷயங்களில் இவர்கள் கண்டிப்பாக ஈடுபடுவார்கள்.

இவர்கள் செய்யவில்லை என்றாலும் இவர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வலுக்கட்டாயமாக இவர்களிடமிருந்து கோவில் சார்ந்த விஷயத்திற்கும் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணி சார்ந்த விஷயத்திற்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.இதை நாம் முன்ஜென்மத்தில் இறைவனுக்கு செய்யத் தவறிய கடன் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் யாருடைய ஜாதகத்தில் (குரு,கேது)சேர்க்கை இருக்கிறதோ இவர்கள் முன் ஜென்மத்தில் குழந்தைகளுக்கு தன்னுடைய கடமைகளையும் செயல்பாடுகளையும் ஒழுங்காக சரிவர நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் இவர்கள் தன்னுடைய குழந்தைகளுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் எவ்வளவு தான் அவர்கள் மீது பாசத்தைக் காட்டினாலும் எவ்வளவுதான் குழந்தைகளுக்காக இவர்கள் உழைத்தாலும் குழந்தைகளிடமிருந்து அதற்கான ஒரு அங்கீகாரமும் மரியாதையும் பாசமும் இவர்களுக்கு ஒரு போதும் வரவே வராது.குழந்தைகள் இவர்களைப் பார்த்து நீ உன்னுடைய கடமை தான் செய்கிறாய்.நீ எனக்கு பெரியதாக எதுவும் ஒன்றும் செய்யவில்லை என்றுதான் கேட்பார்கள்.

மேலும் இவர்கள் வருமானத்தை ஒழுங்காக சம்பாதிப்பதிலும் சம்பாதித்த பணத்தை ஒழுங்காக கையாள்வதிலும் முன் ஜென்மத்தில் ஒழுங்காக என்னுடைய கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.ந்த ஜென்மத்தில் இவர்கள் தன்னுடைய குடும்பத்திற்காக எவ்வளவு தான் சம்பாதித்து கொடுத்தாலும் இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று தான் குடும்பத்தினர் இவர்களை பார்த்து கேட்பார்கள்.வருமானத்தை சேமிப்பதில் இவர்களுக்கு கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.

பணத் தேவையும்,பணப் பிரச்சினையும் இவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.இவர்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தில் தனக்கென்று எதுவும் அவ்வளவாக அனுபவித்திருக்க மாட்டார்கள்.

மேலும் இந்த குரு கேது சேர்க்கை இருப்பவர்களை கேது பகவான் வலுக்கட்டாயமாக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு செய்ய வைக்கிறார்.நான் பார்த்த (குரு,கேது) சேர்க்கை இருப்பவர்கள் ஆன்மீக ஈடுபாட்டில் இருக்கிறார்கள்.

2.சனீஸ்வரர்,கேது சேர்ந்திருந்தால்

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த சனி கேது சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் முன் ஜென்மத்தில் தொழில் சார்ந்த விஷயங்களிலும் கடமை சார்ந்த விஷயங்களிலும் கர்மம் சார்ந்த விஷயங்களிலும் தன்னுடைய கடமைகளையும் செயல்பாடுகளையும் ஒழுங்காக சரிவர நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் யாருடைய ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் அதாவது தனக்கு தொழில் செய்ய பிடித்திருக்கிறதோ இல்லையோ விருப்பம் இருக்கிறதோ இல்லையோ வழுக்கட்டாயமாக தொழிலை கேது பகவான் செய்ய வைப்பார்.

இந்த (சனி,கேது) சேர்க்கை இருப்பவர்களுக்கு தொழில் செய்ய பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக கேது பகவான் தொழில் செய்ய வைத்து முன் ஜென்மத்தில் செய்யத் தவறிய கடமைகளையும் கடனையும் வட்டியும் முதலுமாக இந்த ஜென்மத்தில் பெற்றுக் கொள்வார்.

இந்த கிரக சேர்க்கை இருப்பவர்கள் தொழிலை வேண்டா வெறுப்புக் என்றும் கடனுக்காகவும் கடமைக்காகவும் தான் தொழில் செய்பவர்கள்.ஒரு தொழிலில் நிலையாக இருக்கவே மாட்டார்கள் எல்லாத் தொழிலும் செய்ய வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படும்.

மேலும் இந்த (சனி,கேது) சேர்க்கை இருப்பவர்கள் தன்னுடைய மூத்த சகோதரருக்கும் தன்னுடைய சித்தப்பாவுக்கும் எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் எவ்வளவு தான் அவர்கள் மீது பாசத்தைக் காட்டினாலும் அதற்கான மரியாதையும் அங்கீகாரமும் பாசமும் மூத்த சகோதரரிடம் இருந்தும் சித்தப்பாவிடம் இருந்தும் இருந்தவர்களுக்கு என்றைக்குமே வராது.

இந்த கிரக சேர்க்கை இருப்பவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருந்தார்கள் என்றால் அந்த மூத்த சகோதரர்கள் தன்னுடைய வாழ்க்கையை வெறும் கடமைக்காகவும் கடனுக்காகவும் என்று தான் தன்னுடைய வாழ்க்கையே வாழ்வார்.

மேலும் யாருடைய ஜாதகத்தில் உள்ள இந்த (சனி, கேது) சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய ஆயுளை முன் ஜென்மத்தில் ஒழுங்காக சரிவர வாழவில்லை என்று அர்த்தம் பாதியிலேயே தன்னுடைய ஆயுளை முடித்து இருக்கிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் இவர்கள் தன்னுடைய ஆயுளை வெறும் கடமைக்கென்றும் கடனுக்கென்றும் என்றும் தான் வாழ்வார்கள்.மேலும் ஆன்மிக கிரகமாகிய கேது பகவான் தொழிலுக்கு காரகதுவமான சனி பகவானுடன் இணைவதால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு நாட்டத்தை உண்டாக்குகிறார்.

அதாவது ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் சரி ஜோதிடம் சார்ந்த விஷயங்களிலும் சரி மிகவும் புழமை வாய்ந்த மிகவும் நுட்பமாக ஜோதிடர்களை இந்த (சனி கேது) சேர்க்கை உண்டாக்குகிறது.

3.செவ்வாய்,கேது சேர்ந்திருந்தால்

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த (செவ்வாய்,கேது )சேர்க்கை இருக்கிறதோ இவர்கள் முன் ஜென்மத்தில் வீடு, வண்டி, வாகனம், சொத்து, உத்தியோகம் இளைய சகோதரர் இது சார்ந்த விஷயங்களில் தன்னுடைய செயல்பாடுகளையும்,கடமைகளையம், ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சம்பந்தப்பட்ட நபர் வெறும் கடனுக்காகவும் கடமைகாகவும் வேண்டா வெறுப்புக் கென்றும் தான் செயல் படுவார்.செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் கேது பகவான் வலுக்கட்டாயமாக இவர்களை செய்ய வைத்து முன்ஜென்மத்தில் செய்யத் தவறிய கடமைகளை வட்டியும் முதலுமாக கேது பகவான் இவர்களிடமிருந்து வசூலித்து விடுவார்.

அதாவது யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த (செவ்வாய் கேது) சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் உத்தியோகத்திற்கு செல்வதே வெறும் கடமைக்கென்றும் கடனுக்கென்றும் தான் செல்வார்கள்.

உத்தியோகத்திற்கு சென்றே ஆக வேண்டும் வேறு வழி இல்லையே என்ற மனோபாவத்தோடு தான் இவர்களுக்கு செல்வார்கள்.

உத்தியோகத்திற்கு செல்வதற்கு இவர்களுக்கு விருப்பம் இருக்காது.

இருந்தாலும் கேது பகவான் வழுக்கட்டாயமாக இவர்களை உத்தியோகத்திற்கு செல்ல வைப்பார்.

உத்தியோகத்தில் என்னதான் இவர்கள் உழைத்தாலும் அதற்குத் தகுந்தவாறு சம்பள உயர்வு பதவி உயர்வு இவர்களுக்கு வராது.எவ்வளவுதான் உத்தியோகத்தில் வேலை செய்தாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் மற்றவர்கள் இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்.

உத்தியோகத்தில் கொடுத்த வேலையை சரியாக ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என்ற மனோபாவமும் இருக்காது.வேலைக்கு செல்வதே இவர்களுக்குப் பிடிக்காது.

மேலும் வீடு வாகனம் சொத்து இது அனைத்தும் வாங்குவதற்கும் விற்பதற்கும் இவர்களுக்கு விருப்பம் இருக்காது.வேறு வழியில்லை விற்றே ஆக வேண்டும் அல்லது வாங்கியே ஆகவேண்டும் என்ற மனோபாவத்துடன் தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.வண்டி ஓட்டுவதற்க்கே இவருக்கு விருப்பம் இருக்காது.

இவர்கள் தங்கியிருக்கும் வீடே இவர்களுக்குப் பிடிக்காது அதாவது வீட்டில் இருப்பதே வெறும் கடமைக்காகவும் கடனுக்காகவும் என்றுதான் இவர்கள் இருப்பார்கள்.

மேலும் யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த (செவ்வாய், கேது) சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய இளைய சகோதரருக்கு எவ்வளவுதான் உழைத்தாலும் எவ்வளவுதான் அவர்களுக்காக இவர்கள் கஷ்டப்பட்டாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் இளைய சகோதரிடம் இருந்து என்றைக்குமே இவர்களுக்கு வராது.

இந்த கிரக சேர்க்கை இருப்பவர்களுக்கு இளைய சகோதரர்கள் இருந்தார்கள் என்றால் அந்த இளைய சகோதரர்கள் தன்னுடைய வாழ்க்கையை வெறும் கடமைக்காகவும் கடனுக்காகவும் என்று தான் தன்னுடைய வாழ்க்கையே வாழ்வார்.

4) சூரியன், கேது சேர்ந்திருந்தால்

யாருக்கெல்லாம் இந்த (சூரியன், கேது)சேர்க்கை ஜாதகத்தில் இருக்கிறதோ அவர்கள் முன் ஜென்மத்தில் தந்தையாக செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காக சரிவர செய்யவில்லை என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் இவர்களுக்கு தந்தை மூலம் வரக்கூடிய அனுசரிப்பு தந்தை மூலம் வரக்கூடிய உதவிகள் பயன்கள் எதுவும் அவ்வளவாக இருக்காது.அதாவது ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் உதவக்கூடிய இவர்களின் தந்தை அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே சென்று உதவி செய்யும் இவரின் தந்தை தன்னுடைய குடும்பத்திற்காக தன்னுடைய பிள்ளைகளுக்காக எதுவும் அவ்வளவாக நியாயமாக செய்யவே மாட்டார்.அதாவது இந்த சூரியன் கேது கிரக சேர்க்கை இருப்பவர்களின் தந்தை வீட்டிற்கு பிரயோஜனம் படாமல் இருப்பார்.

மேலும் இந்த (சூரியன், கேது) சேர்க்கை இருப்பவர்களே தந்தை எனும் ஒரு கடமையை வெறும் பேருக்கு என்றே செய்வார்.தந்தையாக பிள்ளைகளுக்கு செய்யும் அனைத்து கடமைகளையும் வெறும் கடனுக்கு என்றே இந்த ஜாதகர் செய்வார்.

இவர்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவருமே டம்மி பீஸாக இருப்பார்கள் அல்லது எதற்கும் பிரயோஜனம் படாமல் இருப்பார்கள்.

தன்னுடைய குடும்பத்திற்குப் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பார்கள்.எப்போதுமே குடும்பத்தில் உள்ள பெண்களிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பவர்கள்.இந்த சூரியன் கேது சேர்க்கை இருப்பவர்களின் குடும்பம்.

இந்த (சூரியன், கேது) சேர்க்கை இருப்பவர்களின் தந்தையும் சரி சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரி குடும்பத்திற்காக சொத்து சேர்க்காதவராக இருப்பார் அடுத்தவர்களுக்கு உதவ கூடிய இவர்கள் தன்னுடைய குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருப்பார்கள்.

தந்தையாக குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செயல்களையும் சம்பந்தப்பட்ட ஜாதகர் வெறும் கடனுக்கு என்றும் கடமைக்கென்றும் வேண்டா வெறுப்புக் என்றும் தான் இந்த ஜென்மத்தில் செய்வார்.

5). சந்திரன், கேது சேர்ந்திருந்தால்

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த ,(சந்திரன்,கேது) சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் முன் ஜென்மத்தில் சந்திரன் காரகத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய செயல்பாடுகளையும் கடமைகளையும் சரிவர ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

தன்னுடைய தாய்க்கு முன் ஜென்மத்தில் மகனாக ஆற்ற வேண்டிய செயல்களையும் கடமைகளையும் ஒழுங்காக நிறைவேற்றாமல் இருந்திருக்கிறார் என்று அர்த்தம்.இந்த ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு தாய் மூலம் வரக்கூடிய அனுசரிப்பு உதவிகள் பயன்கள் எதுவும் அவ்வளவாக ஒழுங்காக இருக்காது என்று அர்த்தம்.

அடுத்தவர்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே உதவி செய்யக்கூடிய தன்னுடைய தாய் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் உதவி செய்ய முன் வர மாட்டார்.

அதாவது யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த (சந்திரன், கேது) சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய தாய்க்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் எவ்வளவுதான் தாய் மீது பாசத்தைக் காட்டினாலும் ,

அன்பை காட்டினாலும் அதற்கான ஒரு மரியாதையையும் அங்கீகாரத்தையும் ஒரு போதும் தன்னுடைய தாய் இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள்.இவர்களின் தாய் இவர்களைப் பார்த்து நீ உன் கடமையை செய்கிறாய் என்றுதான் கேட்பார்.

6). சுக்கிரன், கேது சேர்ந்திருந்தால்

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் இந்த (சுக்கிரன், கேது)சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் சுக்கிரன் சம்பந்தப்பட்ட காரகத்துவம் சார்ந்த விஷயத்திற்கு முன் ஜென்மத்தில் ஒழுங்காக தன்னுடைய கடமைகளையும் செயல்பாடுகளையும் சரிவர நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட நபர் சுக்கிரன் சார்ந்த விஷயங்களை வெறும் கடமைக்காகவும் கடனாகவும் என்று தான் செய்வார்.செலவு செய்வதையே அல்லது விரயச் செலவுகளையே வெறும் கடமைக்காக கடனுக்காக என்று தான் செய்வார்.

தாம்பத்தியம் சார்ந்த விஷயங்கள் உடலுறவு காமம் சார்ந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட ஜாதகர்

வெறும் கடமைக்காக கடனுக்காக என்றுதான் இது சார்ந்த விஷயங்களில் இவர்களுடைய செயல்பாடுகளும் சிந்தனைகளும் இருக்கும்.

யாருடைய ஜாதகத்தில் (சுக்கிரன் கேது)சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் உடலுறவு தாம்பத்தியம் இது சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதற்கு விருப்பமில்லை என்றாலும் கேது பகவான் இவர்களை வலுக்கட்டாயமாக இது சார்ந்த விஷயங்களில் ஈடுபட வைத்து முன் ஜென்மத்தில் நிறைவேற்றத் தவறிய

கடமைகளையும் கடனையும் வட்டியும் முதலுமாக பெற்றுக் கொள்வார்.

விரயச் செலவுகள் அல்லது செலவுகள் செய்ய இவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் கேது பகவான் வலுக்கட்டாயமாக தேவையில்லாத செலவுகளை எல்லாம் இவர்களை செய்ய வைப்பார்.

மேலும் இந்த கிரக சேர்க்கை இருப்பவர்கள் தன்னுடைய மனைவிக்காக எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் மனைவிக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் மனைவியின் மீது எவ்வளவு தான் இவர்கள் பாசத்தை வைத்துக் கொண்டாலும் அதற்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் மனைவியிடமிருந்து என்றைக்குமே இவர்களுக்கு வராது.மனைவி இவர்களைப் பார்த்து நீங்க எனக்கு என்ன செய்துவிட்டாய் உன்னுடைய கடமையைத் தான் நீ எனக்கு செய்கிறாய் என்றுதான் கேட்பாள்.

இவர்களுடைய மனைவியும் தன்னுடைய வாழ்க்கையை வெறும் கடமைக்கென்றும் கடனுக்கென்றும் தான்.

7). புதன், கேது சேர்ந்திருந்தால்

யாருடைய ஜாதகத்தில் இந்த புதன் கேது சேர்க்கை இருக்கிறதோ அவர்கள் முன் ஜென்மத்தில் புதன் காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் தன்னுடைய கடமைகளை ஒழுங்காக சரிவர நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்.

இந்த ஜென்மத்தில் புதன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சம்பந்தப்பட்ட நபர் கடனுக்கென்றே செய்வார்.கடன் வாங்குவதற்கு இவருக்கு விருப்பம் இருக்காது வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாக இவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை கேது பகவான் கண்டிப்பாக ஏற்படுத்துவார்.

படிப்பதற்கே இவருக்கு விருப்பம் இருக்காது வேறு வழி இல்லை படித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்ததுடன் தான் இவர்கள் படிப்பார்கள்.நான் பார்த்த (புதன், கேது)சேர்க்கை இருப்பவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது

இவர்கள் படிக்க விருப்பமில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக கேது பகவான் படிப்பை மேற்கொள்ள வைக்கிறார்.

அதாவது ஜாதகத்தில் கேது பகவானுடன் எந்த கிரகங்கள் எல்லாம் இணைந்து இருக்கின்றதோ.

அந்த கிரக உறவு காரகத்துவதிடம் இருந்து நாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.result எதிர்பார்க்கக் கூடாது.

இந்த விஷயங்களை நாம் முன்கூட்டியே ஜாதகத்தை வைத்து தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நாம் நம்முடைய எண்ணங்களையும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து கண்டிப்பாக தப்பிக்க இயலும்.

யாருடைய ஜாதகத்தில் எல்லாம் கேதுவுடன் கிரகங்கள் இணைந்து இருக்கின்றதா என்று பாருங்கள் அப்படி இருந்தால் மேற்கொண்ட இந்த சூட்சமத்தை நீங்கள் பொருத்திப் பாருங்கள் சரியாக பொருந்தும்.

2 Comments

  1. நான் பு+கே தொடர்புடையவன்... எனக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம்.. நிறைய படித்தேன் ஐயா... ஆனால் அதனால் பயனொன்றுமில்லை...

    ReplyDelete
  2. Sir can I have your contact no.

    ReplyDelete
Previous Post Next Post