27 நட்சத்திரத்திற்குரிய தொழில் பகுதி-3

27 நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திரத்திற்குரிய தொழில்களுடன் ஜாதகர்கள் தங்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர்.

சுவாதி நட்சத்திரத்திற்குரிய தொழில்

தன்னை கேவலப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சுவாதி நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி சுவாதி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • வாகன விற்பனை
  • ஹோட்டல்
  • பங்குச் சந்தை வர்த்தகம்
  • இசைக்கலைஞர்கள்
  • தொழில்நுட்ப வல்லுநர்கள்
  • விமானத்துறையுடன் தொடர்புடைய தொழில்
  • மல்யுத்த வீரர்கள்
  • பலூன்கள் உற்பத்தி மற்றும் விற்பனை
  • ஒப்பந்ததாரர்
  • பல்புகள்,வண்ண விளக்குகள் விற்பனை 
  • குத்துவிளக்கு விற்பனை, கோவில்களில் விளக்கு விற்பனை 
  • ஆசிரியர்கள்
  • வழக்கறிஞர்கள்
  • பேச்சைப் பயன்படுத்தி செய்யக் கூடிய தொழில்
  • வர்த்தகத் தலைவர்கள் 
  • வீட்டுப் பணியாளர்கள் 
  • திருமண தகவல் மையம் 

விசாகம் நட்சத்திரதிற்குரிய தொழில்

நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் தரும் விசாக நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி விசாகம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 
  • கிரிமினல் வக்கீல்
  • நடனக் கலைஞர்கள்,இசை கலைஞர்கள்
  • ஜவுளி உற்பத்தி தொழில்,நீதிபதி, 
  • உளுந்து மற்றும் எண்ணெய் பொருட்கள் விற்ப்பனை, 
  • வெளிநாட்டு வர்த்தகம்
  • வங்கி பணி
  • காவல் துறை
  • வருமான வரித்துறை
  • வரி வசூலிப்பாவர்கள்
  • அரசியல்
  • பாலின மருத்துவர்
  • காப்பீடு வசூலிப்பாவர்கள் (உதரணமாக எல் ஐ சி ஏஜண்ட்)
  • லோன் வசூலிப்பாவர்கள்
  • வணிக சங்க தலைவர்கள்
  • டிவி சேனல்கள் வானொலிகளில் பணிபுரிபவர்கள்.

அனுசம் நட்சத்திரதிற்குரிய தொழில்

எடுத்த காரியத்தில் வெற்றி பெற இரவு பகல் பாராமல் உழைக்க கூடிய அனுசம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அனுஷம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

  • காவல் துறை, இராணுவம் 
  • பேருந்து உரிமையாளர் (பயணத்திற்கு பயன்படக் கூடிய கார்,ஆட்டோ போன்றவற்றையும் குறிக்கும்)
  • தீ அணைப்பு துறை
  • உளவுத்துறை 
  • மருத்துவம்
  • வங்கி சம்பட்தபட்ட பணி 
  • இரவு பணி சம்பந்தபட்ட தொழில்
  • சுரங்க தொழில்
  • வழக்கறிஞர்
  • இயற்பியல் சம்பந்தபட்ட துறை 
  • போட்டோகிராபர்  
  • வெளிநாடுகளுக்கு சென்று செய்யும் தொழில் 
  • ஜோதிடர்கள்
  • கண் கட்டு வித்தை செய்பவர்கள் (மேஜிக்)

கேட்டை நட்சத்திரதிற்குரிய தொழில்

எந்த காரியமானாலும் சுறுசுறுப்பாக செயக் கூடிய கேட்டை நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி கேட்டை நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 
  • குடும்ப வணிகம் 
  • இசை வல்லுனர்கள்
  • காவல் துறை, இராணுவம், 
  • ஹெல்ப் லைனில் பணிபுரிபவர்கள்(உதரணமாக `108,100,வாடிக்கையாளர்கள் சேவை மையம்)
  • அரசு அதிகாரிகள்
  • பத்தரிக்கை நிருபர்கள்
  • நிகழ்ச்சி தொகுப்பாளர்
  • தொழிற் சங்கம்
  • நடிகர்கள்
  • அறுவை சிகிச்சை நிபுணர்கள் 
  • கிரிமினல் வழகறிஞர்
  • கடற்படை
  • மன நல மருத்துவர் 
  • அமானுஷ்யம்(மேஜிக்)

மூலம் நட்சத்திரதிற்குரிய தொழில்

எதிலும் நியாயமாக நடந்து கொள்ளக்கூடிய மூலம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.
  • பழவியாபாரம்
  • விவசாயம்
  • மருத்துவர்
  • மருந்து விற்ப்பனை(மெடிக்கல்)
  • ஆயுர்வேத மருத்துவம்
  • பல் மருத்துவர்
  • அமைச்சர்கள்
  • பேச்சாளர்கள்
  • எழுத்தாளர்கள்
  • ஆன்மீக ஆசிரியர்
  • காய்கறி விற்பனை
  • பயிற்சியாளர்கள்
  • மூலிகை வியாபாரம்,
  • ஆசிரியர்கள்
  • மத குருக்கள்
  • சட்ட ஆலோசகர்,
  • ஜோதிடர்கள்
  • கெமிக்கல் கையாலும் துறை
  • இயற்பியலாளர்
  • கணித ஆசிரியர்   

பூராடம் நட்சத்திரதிற்குரிய தொழில்

தன்னம்பிக்கை மிக்க பூராடம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்பம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி பூராடம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 
  • மாலுமிகள்
  • விமானிகள்
  • விமான போக்குவரத்து துறை 
  • கப்பல் தொழில் 
  • மீன்பிடி தொழில்
  • விளையாட்டு ஆசிரியர்கள் 
  • எழுத்தாளர்கள்,
  • பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல்.
  • நீர் பயன்படுத்தி செய்யக் கூடிய தொழில்
  • ஆயுத தொழிற்சாலையில் பணி
  • பொழுதுபோக்கு இடங்களில் செய்யும் வேலை
  • ஆசிரியர்
  • உயரமான இடங்களில் பணிபுரிபவர்கள் (மலை சார்ந்த இடம்)
  • ஆன்மீக பொருட்கள் விற்பனை (பூஜை பொருட்கள் தேங்காய், சூடம்,பத்தி)

உத்திராடம் நட்சத்திரதிற்குரிய தொழில்

மனோதிடமும் புத்திசாலித்தனமும் மிக்க உத்திராடம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி உத்திராடம்  நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 
  • நூலகர்கள்
  • பொருளாதார நிபுணர்கள்
  • வனத்துறை அதிகாரிகள்
  • விளையாட்டு வீரர்கள்
  • பாதுகாப்பு பணியாளர்கள்
  • உடற்பயிற்சி நிலையம்
  • நீதிபதி
  • இராணுவம்
  • கல்வி துறை 
  • ஊடகத்துறை
  • திரைத்துறை
  • கட்டுமான தொழில்
  • அரசு ஒப்பந்த தொழில்
  • அனைத்து நிர்வாகம் சார்ந்த தொழில் 
  • சட்டமன்ற உறுப்பினர்
  • மருத்துவர் 

Post a Comment

Previous Post Next Post