செவ்வாய் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.
செவ்வாய் கேது சேர்க்கை
செவ்வாய் சகோதர காரகன் மற்றும் மைத்துனன் (மச்சான்) உறவை குறிப்பவர். மூலநூல்களில் பெண்களுக்கு களத்திர காரகன் (கணவனை குறிக்கும் கிரகம்) செவ்வாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கேது ஞானக் காரகன்.எதையும் தடை செய்வது கேதுவின் இயல்பு.
இந்த சேர்க்கை சுபத்துவமாக இருந்தால் போதை மருந்து தடுப்பு பிரிவு, தீவிரவாத தடுப்பு பிரிவு, போலிஷ் துறையில் செக்போஸ்டில் வேலை, சட்டத்துறை போன்ற வேலைகளில் சிறப்பாக செயல்பட்டுவார்கள்.
செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்கள் எப்போது கோபப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. பார்ப்பதற்கு சாது போல இருப்பார்கள் திடீரென கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள்.
செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்கள் தங்களை மற்றவர்களை விட திறமையானவர்களாக நினைப்பார்கள், அதை இவர்கள் வெளியில் கூறாவிட்டாலும் இவர்களுக்கு அந்த எண்ணம் எப்போதும் இருக்கும். செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும் அதே சமயம் பயமும் அதிகம் இருக்கும் (தனிமையில் இருக்கும் போது ஏதோ ஒரு அச்ச உணர்வு இவர்களுக்கு ஏற்படும்).
சகோதர வர்க உறவுகளோடு சொத்து பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. சொத்து பாகப்பிரிவினை செய்யும் போது இவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பத்திர பதிவு செய்யும் போது இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல புகழ் பெற்ற கைராசியான மருத்துவர்களை உருவாக்குவதும் இந்த இணைவே.நுனுக்கமான மறைமுகமான விஷயங்களை கண்டறிவதில் இவர்கள் வல்லவர்கள்.
செவ்வாய் கேது சேர்க்கை உள்ளவர்கள் ரம்மி (சீட்டாட்டம்) பணம் வைத்து விளையாடுவது, சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் கேது இணைந்து செவ்வாய் அல்லது கேது புத்தி நடப்பில் வந்தால் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடு படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.ஆண்களுக்கு வீரியம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வளைந்து கொடுத்து பேசத் தெரியாது இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.