இந்து லக்னம் என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடுவது? அதன் பலன் என்ன? என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
இந்து லக்னம் என்றால் என்ன
இந்து லக்னம் என்பது ஜாதகத்தில் ஒரு ஜாதகரின் செல்வ நிலையை ஆராய பயன்படுகிறது. அதாவது ஒரு ஜாதகரின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதை இந்து லக்னம் மூலம் நாம் அறியலாம்.
இந்து லக்னம் பெயர் காரணம்
சந்திரனுக்கு இந்து என்ற மற்றொரு பெயரும் உண்டு. சந்திரனை மையமாக கொண்டு இந்து லக்னம் கணக்கிடப்படுவதால் இந்து லக்னம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு தன் லக்னம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இந்து லக்னம் எவ்வாறு கணிபப்பது
இந்து லக்னம் கணிக்க ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு கதிர் எண்ணைக் கொடுத்துள்ளனர்.ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் அந்த கிரகங்களுக்கு கதிர் எண் கொடுக்கப்படவில்லை.அந்த கதிர் எண் பின்வருமாறு.
கிரகங்கள் | கதிர் எண் |
---|---|
சூரியன் | 30 |
சந்திரன் | 16 |
செவ்வாய் | 6 |
புதன் | 8 |
குரு | 10 |
சுக்கிரன் | 12 |
சனீஸ்வரர் | 1 |
இப்போது இந்து லக்னம் எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம்.
லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி எண்ணையும் சந்திரனுக்கு ஒன்பதாம் அதிபதி எண்ணையும் கூட்ட வேண்டும். கூட்டி வந்த தொகை 12க்கும் அதிகமாக இருந்தால் அந்த எண்ணை 12-ஆல் வகுத்து மீதி வரும் எண்ணை சந்திரனில் இருந்து எண்ண வேண்டும். உதாரண ஜாதகம் மூலம் இந்து லக்கினம் எவ்வாறு கணிபப்பது என்று இப்போது பார்ப்போம்.
உதாரண ஜாதகம் 1:
உதாரணமாக ஒருவருக்கு மேஷ லக்னம் மகர ராசி எனக் கொள்வோம். அவருக்கு இந்து லக்னம் எவ்வாறு கணிபப்பது என்று இப்போது காணலாம்.
இந்து லக்னம்=லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி எண் + சந்திரனுக்கு ஒன்பதாம் அதிபதி எண்
இந்து லக்னம்
=10(தனுசு கதிர் எண்)+8(கன்னி கதிர் எண்)
=18.
வரும் எண் 12 மை விட அதிகமாக இருப்பதால் 18-யை 12-ஆல் வகுக்க வேண்டும்.
18-யை 12 ஆல் வகுத்தால் மீது 6 கிடைக்கும். அந்த எண்ணை சந்திரனில் இருந்து எண்ண வேண்டும். சந்திரனில் இருந்து எண்ணினால் வரும் ஆறாவது இராசி மிதுனம் ஆகும். மேற்கண்ட ஜாதகத்திற்கு மிதுனமே இந்து லக்னம் ஆகும்.
உதாரண ஜாதகம் 2:
லக்னமும் இராசியும் ஒன்றாக இருந்தால் இந்து லக்னம் எவ்வாறு கணிபப்பது என்று இப்போது பார்ப்போம். உதாரணத்திற்கு ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்திற்கு இந்து லக்கினம் கணக்கிடுவதை இப்போது பார்க்கலாம்.
இந்து லக்னம்
=1(மகரம்)+1(மகரம்)
=2
வரும் எண் 12-யை விட குறைவாக இருப்பதால் இந்த எண்ணை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
சந்திரனில் இருந்து இரண்டை எண்ணினால் நமக்கு மிதுனம் இந்து லக்னமாக கிடைக்கும்.
இந்து லக்னத்தின் பலன்
- இந்து லக்னத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகத்தின் தசா புக்தி காலங்களில் ஜாதகர் பெரும் செல்வம் மற்றும் புகழை அடைவார்.
- இந்து லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் இந்து லக்கினத்தில் இருந்து ஏழாவது வீட்டில் உள்ள கிரகம் இந்து லக்னத்தில் ஒரு கிரகம் இருந்தால் அது தரும் பலனில் 75 சதவீத பலனை தரும்.
- இந்து லக்னத்தில் இருந்து 5 மற்றும் 9 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் 50 சதவீத பலனை தரும்.
- இந்து லக்னத்தை தங்கள் சிறப்பு பார்வையால் பார்க்கும் கிரகங்கள் (குரு, சனீஸ்வரர், செவ்வாய்) 30 சதவீத பலனை தரும்
- இந்து லக்கினத்திற்கு எட்டாவது வீட்டில் நிற்கும் கிரகங்களின் தசா புத்திகளில் நாம் தேவையற்ற செலவுகளை செய்வோம்.
- இந்து லக்னம் லக்னத்திற்கு 6 மற்றும் 8 ஆம் இடங்களில் இருந்தால் அது செல்வத்தை தந்தாலும் அது நமக்கு புகழ் மற்றும் மரியாதையை தராது.
- இந்து லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் நீடித்த செல்வம் கிடைக்கும்
இந்து லக்னத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் பார்த்தாலோ ஜாதகர் பெரும் செல்வம் மற்றும் புகழை அடைவார். இந்து லக்னத்தில் உள்ள கிரகத்தின் தசா வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்