அனைவருக்கும் தொழில் என்பது இன்றியமையாதது. பலர் முழு நேரமாகவும் சிலர் பகுதி நேரமாகவும் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள்.பலர் இந்த தொழிலில் ஈடுபட்டாலும் அனைவருக்கும் இந்த தொழிலில் கை கொடுப்பது இல்லை. ஒருவருக்கு ரியல் எஸ்டேட் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.
ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூமி காரகன் என்று அழைக்கப்படும் கூடிய செவ்வாய் பகவான் கன்னி ராசியை பார்க்க வேண்டும். எந்த லக்னமாக இருந்தாலும் செவ்வாய் கன்னி வீட்டில் இருந்தால் அல்லது கன்னி வீட்டை பார்த்தால் அவருக்கு ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் வரும் (செவ்வாய் பகவானுக்கு 4,7,8 பார்வைகள் உள்ளன). அதேசமயம் செவ்வாய் எட்டாம் அதிபதியாகவோ அல்லது எட்டாம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு ரியல் எஸ்டேட் மூலம் வருமானமும் வரும் பல பிரச்சனைகளும் சேர்ந்தே வரும். உதாரண ஜாதகம் மூலம் யாருக்கு ரியல் எஸ்டேட் தொழில் அல்லது ரியல் எஸ்டேட் மூலம் கமிஷன் யாருக்கு கிடைக்கும் என்று இப்போது பார்ப்போம்.
உதாரண ஜாதகம் 1:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் ஆய்வுக்கு தேவையான கிரகங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உதாரணம் ஜாதகம்-1 இல் செவ்வாய் மீனத்தில் உள்ளார், செவ்வாய் தனது 7 ஆம் பார்வையின் மூலம் கன்னி வீட்டை பார்க்கிறார். இதனால் இவர் ரியல் எஸ்டேட் மூலம் கோடிகளை சம்பாதிக்கும் புகழை தந்தது. மேலும் கடக லக்னத்திற்கு செவ்வாய் யோகாதிபதியும் ஆகி கன்னி வீட்டை பார்ப்பதால் இந்த யோகம் இன்னும் சிறப்பாக வேலை செய்தது என்றும் கூறலாம் .
உதாரண ஜாதகம் 2:
ஆய்வு ஜாதகம் 2 இல் செவ்வாய் கன்னி இராசியில் உள்ளார். நாம் மேற்குறிப்பிட்ட விதிப்படி செவ்வாய் கன்னி இராசியில் இருந்தாலோ அல்லது கன்னி இராசியை பார்த்தாலோ அவர்களுக்கு ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் வரும் என்னும் விதிப்படி செவ்வாய் இந்த ஜாதகத்திற்கு கன்னி இராசியில் உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் கமிஷன் மூலம் பல இலட்சங்கள் இவருக்கு கிடைத்துள்ளது. மேலும் தனுசு லக்னத்திற்கு செவ்வாய் 5 அதிபதியாகு பத்தில் திக் பலம் பெறுவதால் இந்த யோகம் இன்னும் சிறப்பாக வேலை செய்தது என்றும் கூறலாம்.
உதாரண ஜாதகம் 3:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்திற்கு சிம்ம லக்னம் ஆகும். சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் அதிபதி ஆவார். செவ்வாய் ஏழாம் பார்வையாக கன்னி வீட்டை பார்த்தாலும் லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் இடத்தில் இருப்பதால் இவருக்கு ரியல் எஸ்டேட் மூலம் நிறைய லாபமும் அதேசமயம் நிறைய பண விரையமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.