வஜ்ர யோகம் என்றால் என்ன?

பொதுவாக வஜ்ரம் என்றால் வலிமை என்று பொருள். பெயருக்கு ஏற்ப வலிமையான யோகத்தை தரக்கூடியது தான் இந்த வஜ்ர யோகம். ஜோதிடத்தில் கேந்திரம் என்று சொல்லப்படக்கூடிய (1,4,7,10) வலிமையான ஸ்தானங்களாக சொல்லப்படுகிறது. லக்ன சுபர்கள் (1,7 )ம் பாவத்திலும். லக்ன அசுபர்கள் (4,10)ம் பாவத்திலும் இருப்பது வஜ்ர யோகம் ஆகும்.

சிலருக்கு முன் வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாகவும் பின் வாழ்க்கை யோகம் நிறைந்ததாகவும் இருக்கும்.இன்னும் சிலருக்கு முன் வாழ்க்கை சிறப்பாகவும் பின் வாழ்க்கை மிகவும் சிரமம் உள்ளதாகவும் உள்ள அமைப்பை காண்கிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் நமக்கு ஏன் இது நிகழ வேண்டும் என்ற சிந்தனை கண்டிப்பாக உண்டாகும். ஆனால், அதற்கான காரணங்கள், காரியங்கள் அறியாமல் தேடாமல், வாழ்வின் நித்திய தேவைகளுக்கும் கடமைகளுக்கும் காலத்திற்குள் அடைபட்டு இருந்து விடுகிறோம். அந்தந்த பருவத்தில் சிலருக்கு மட்டும் தேவையான தருணத்தில் கிடைப்பதும் ஒரு சிறந்த யோக அமைப்பாக கொள்ளலாம். அவ்வாறு உள்ள சில யோகங்களில் வஜ்ர யோகமும் ஒன்றாகும்.

வஜ்ர யோகத்தின் சுப பலன்கள் 

  • வீடு, வாகனம், தொழில், நண்பர்கள் ஆகிய அனைத்தையும் பெற்ற அமைப்பினராக இருப்பர், ஆனால், தொழில் கையாளும் இடத்திலும் வீட்டிற்கான நிலத்திலும் தோஷங்களும் வாஸ்து குறைகளும் உண்டாகும் அமைப்பாகும். நிலங்களை கையாளும் போது அதிக கவனம் தேவை.
  • சில நேரங்களில் நல்லவர்களாகவும் சில நேரங்களில் கெட்டவர்களாகவும் மற்றவர்களின் பார்வைக்கு தெரியும். ஏனெனில், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு ஒரே முடிவை மேற்கொள்ளாமல் மாறி மாறி முடிவெடுப்பதால் அப்படி தோன்றும்.
  • நீடித்த ஆயுள் மற்றும் ஆரோக்கியம் சுறுசுறுப்புடன் இயங்கும் தன்மை இருக்கும்.
  • நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் 
  • எப்போதும் எதையாவது யோசித்து கொண்டு இருப்பார்கள்.
  • சில நேரங்களில் அதீத சிந்தனை காரணமாக தூக்கத்தை இழக்க நேரிடும்.

Post a Comment

Previous Post Next Post