ஒருவரை நாம் தகாத வார்த்தைகளால் திட்டினாலோ அல்லது அவரை பற்றி புரளி பேசுவதாலோ அவருடைய பாவங்களை நாம் எப்படி வாங்கி கொள்கிறோம் என்று நாம் இப்போது பார்ப்போம்
ஜோதிட ரீதியான காரணங்களை பார்ப்பதற்கு முன்பு புத்தருக்கு ஏற்பட்ட நிகழ்வு ஒன்றை பார்க்கலாம். புத்தர் ஒரு நாள் அவருடைய சீடர்களுக்கு ஆலோசனை தந்து கொண்டு இருக்கும் போது அவ்வழியே வந்த ஒருவன் புத்தரை பற்றி தவறாக பேசினான் புத்தர் அமைதியாக இருந்தார். சீடர்களோ அவன் மீது கடுமையான கோபத்தில் இருந்தனர்.புத்தர் அமைதியாக இருப்பதை கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர் அவன் அங்கிருந்து சென்ற பின்பு புத்தரிடம் கேட்டனர் நீங்கள் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள் என்று அதற்கு புத்தர் அவன் கூறியதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை அதனால் அவன் கூறிய வார்த்தைகள் அவனுக்கே சென்று விடும் என்று கூறினார்.புத்தர் கூறிய சூட்சுமத்தை நாம் இங்கு அறியலாம்.
ஜோதிட ரீதியான காரணங்களை நாம் இப்போது பார்ப்போம்.நாம் ஏற்கனவே கூறியது போல ஒரு பாவம் செயல்படும் போது அதற்கு திரிகோண பாவங்களும் செயல்படும். ஒருவர் உங்களை அவமானப்படுத்தும் போது அவன்
தன்னுடைய 8ம் பாவத்தை இயக்குவான் . நீங்கள் அவன் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அதுவே அவனை செயல் இலக்க செய்யும்(4,8,12 பாவங்கள் செயல்பட்டு). ஆனால் நீங்கள் அவன் கூறியதை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவனை திட்டினால் உங்களுக்கும் பிரச்சினைகள் தான் ஏற்படும் அதே சமயம் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அவன் உங்கள் பாவத்தை வாங்கிக்கொள்வான் இதனால் உங்களுக்கு பணமும் புகழும் கிடைக்கும்.
அதே சமயம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என நீங்கள் கூறுவது புரிகின்றது.நிச்சயமாக பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.கடவுளிடம் முறையிடுங்கள் உங்கள் பக்கம் நியாயம் இருப்பது கடவுளுக்கு தெரியும்.அவன் எந்த பக்கமும் அசைய முடியாத அளவு அடிக்கும் பாக்கியத்தை அவரே உங்களுக்கு ஏற்படுத்தி தருவார்.
பொறுமையின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் குறைந்தபட்சம் ஏழு முறையாவது பிறர் உங்களை பற்றி புரளி பேசுவதையோ குறை கூறுவதையோ பொறுத்துக் கொள்ளுங்கள்.புற வழி வேதனைகளை விட அக வலி வேதனைகள் மிகவும் கொடியது
Tags:
life
