வெண்ணி முத்து அய்யனார் துணை
தானமும் தர்மமும் ஏன் செய்ய வேண்டும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
ஒருவர் விதி எப்படி இருந்தாலும் அவர் தானமும் தர்மமும் செய்வதன் மூலம் அவரை காத்து கொள்ளலாம் எப்படி?
தானம் தர்மம் என்பது ஜோதிடத்தில் 5,9ம் பாவம் இந்த பாவத்தை நாம் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தால் எப்பேற்பட்ட துன்பங்களும் நம்மை அண்டாது.
5ம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும்.5ஆம் பாவத்தை இயக்க நாம் நம் குல தெய்வம் கோவிலில் வருடம் ஒரு முறை அண்ண தாாம் செய்வது சிறப்பு.
9ம் பாவம் பாக்கிய ஸ்தானம் ஆகும்.
9ம் பாவத்தை இயக்க நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளை உதவி கேட்பவர்களுக்கோ,உதவி தேவைப்படுபவர்களுக்கோ செய்வது சிறப்பு.
அதற்காக உங்களிடம் இருக்கும் அனைத்தையும் தானமாகவும் தர்மமாகவும் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை உங்களால் முடிந்த அளவு அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள்.உதவி செய்யும் எண்ணத்தை வளர்த்து கொண்டாலே நமக்கு பணம் தானாக வரும்
அனைவருக்கும் ஒருநாள் இறப்பு என்ற ஒன்று வந்தே தீரும்.நமக்குள் உள்ள கெட்ட எண்ணங்களை கைவிட்டு நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்போம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Tags:
life
