அய்யனின் மகிமைகள்

இந்த உலகில் மூன்று விதமான மணிதர்கள் இருக்கிறார்கள்.அவர்கள்
1) இயற்கை நல்லவர்கள்
2) நடுநிலையாளர்கள்
3) இயற்கை கெட்டவர்கள்
இது ஒரு நீண்ட பதிவு.இருந்தாலும் எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கமாக இந்த பதிவை தருகிறேன்.


இயற்கை நல்லவர்கள்:
எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.இவர்களை சுற்றி எப்போதும் நல்லவர்களே இருப்பார்கள்.இயற்கை நல்லவர்களால் எந்த உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.அனைத்து உயிரினங்களுக்கும் நல்லதே நினைப்பவர்கள்.யாரையும் கெடுக்கமாட்டார்கள்.இவர்களை இப்போது காண்பது அரிது.ஆனால் இன்றளவும் நிறைய பேர் உள்ளனர்.

நடுநிலையாளர்கள்:
நல்ல நேரம் நடக்கும் போது நல்லவர்களின் மும் கெட்ட நேரம் நடக்கும் போது கெட்டவர்களிடமும் இருப்பார்கள்.நல்லவர்களிடம் இருக்கும் போது அவர்கள் வாழ்க்கை உயரும்.கெட்டவர்களிடம் இருக்கும் போது வாழ்வு உயர்வது போல் தாழ்ந்துவிடும்.ஏனெனில் கெட்டவர்களுக்கு அவர்களிடம் இருக்கும் ஒருவர் நல்லா இருந்தாலே அவர்களுக்கு பிடிக்காது.



இயற்கை கெட்டவர்கள்:
இவர்களை பற்றி பெரிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.எப்போதும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள்.கடவுளைவிட பணம் தான் முக்கியம் என்பார்கள்.நல்லவர்கள் நடுநிலையாளர்கள் போல் இவர்களால் நீண்ட காலம் ஒரு அணியாக இருக்க முடியாது.ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் கண் முன் யார் நல்லா இருந்தாலும் அவர்களுக்கு பிடிக்காது.அவர்களை கெடுக்க நினைப்பார்கள்.

இந்த மூவரும் ஒவ்வொரு ஊரிலும் இருப்பார்கள்.அவர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்.
முக்கியமாக நல்லவர்களால் இயற்கை கெட்டவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.கெட்டவர்களின்ஆட்டம் எப்போதும் இருக்கும்.அவர்களை அடக்குவதும்,அவர்களுக்கே தெரியாமல் நல்லது செய்ய வைப்பது தான் அய்யனை போன்ற குலதெய்வங்களுக்கு வேலை.இவர்கள் சில நேரங்களில் வெற்றி பெறுவது போல் தோன்றினாலும், இவர்களால் எப்போதும் வெற்றி பெறவே முடியாது, இவர்களுடைய கெட்ட எண்ணங்களை என் அய்யனை போன்ற குல தெய்வங்கள் நன்கு அறிவார்கள்.

நல்லவர்களிடம் அன்பையும்,நடுநிலையாளர்களிடம் புத்திக்கூர்மைமையும்,கெட்டவர்களிடம்  ஆங்காரமாகவும் காட்சி தருவார்.என்றும் நல்லவர்களை காத்து நிற்பார்.

Post a Comment

Previous Post Next Post