படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா??? படிக்காதவர்கள் முட்டாள்களா?

படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா??? படிக்காதவர்கள் முட்டாள்களா?


படித்தவர் அனைவரும் அறிவளிகளா? 

படிக்காதவர்கள் அனைவரும் அறிவாளிகளாக இருந்தால் இந்த உலகில் எந்த இடத்திலும் சண்டை என்ற ஒன்றே நடக்காது,அறிவு என்பது ஒன்றை உருவாக்குவதில் மட்டும் இருக்க கூடாது.
மனிதனை மனிதன் புரிந்து கொள்வதிலும் இருக்க வேண்டும்.நமது அறிவு மற்ற உயிரினங்களின் இன்ப துன்பங்களை புரிந்து கொள்வதிலும் இருக்க வேண்டும்.பெரும்பாலான படித்த இளைஞர்கள் சுயநலமாக வாழ்கின்றனர்.
ஏன் சக மனிதர்களின் உணர்வுகளை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.இப்படிபட்டவர்களைத்தான் நாம் அறிவாளிகள் என்று கூறுகிறோமா?
படித்தால் தான் ஒருவர் அறிவாளியாக இருக்க முடியுமா என்ன?

அதற்காக படித்தவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கூறவில்லை.படித்தும் சிலர் முட்டாளாக இருக்கிறார்கள் என்று கூறுகிறேன்.

படிக்காதவர்கள் முட்டாள்களா?

படிக்காதவர்கள் முட்டாள்கள் எனில் இன்று உலகில் இருக்கும் பாதி பிரபலங்கள் முட்டாள்களாகத்தான் இருப்பர்.இந்த உலகில் இருக்கும் பாதி பிரபலங்கள் முட்டாள்கள் என பள்ளியால் ஒதுக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கும்.
உண்மையில் அவர்கள் பள்ளிக்கு சென்று படிக்கவில்லை பள்ளிக்கு சென்று படித்தால்தான் அறிவாளியாக முடியுமா என்ன? ஒரு மனிதனுக்கு அனுபவம் கற்று தராத பாடத்தை எந்தப் பள்ளியாலும் கற்றுத்தர முடியாது.

பள்ளி கல்லூரியில் படித்து பட்டம் பயின்றவர் அறிவாளியா.பள்ளி கல்லூரியில் படிக்காமல் அனுபவ அறிவு மூலம் அனைவருக்கும் நல்லது செய்பவர் அறிவாளியா.

படித்தவர்கள் அனைவரும் புத்திசாலிகளும் அல்ல படிக்காதவர்கள் அனைவரும் முட்டாள்களும் அல்ல.

பள்ளி கல்லுாரியில் சென்று படித்தால் மட்டும் ஒருவருக்கு அறிவு வளராது.ஒருவன் பெயருக்கு பின்னால் அதிக டிகிரி இருந்தால் அவன் அறிவாளி என்று அர்த்தமில்லை.இனிமேலாவது ஒருவரது தொழிலையும் ஒருவரது படிப்பையும் வைத்து ஒருவரை இகழ்வதை தவிர்ப்போம்.

பிகாசா படிக்கவில்லை ஆனால் மிகச்சிறந்த ஓவியர்.

நெல்சன் மண்டேலா படிக்கவில்லை ஆனால் மிகச்சிறந்த மனிதர்.இவருக்கு இருக்கும் அமைதி இவர் பள்ளியில் கற்கவில்லை.

காமராஜர் படிக்கவில்லை ஆனால் மிகச்சிறந்த ஆளுமை நிறைந்த முதலமைச்சர்.அவரை போன்ற முதலமைச்சரை தமிழகம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

பள்ளியில் சென்று படித்தவர்கள் எல்லாம் அறிவாளியாக இருக்க முடியாது என்று கூறி இந்த பதிவை முடித்து கொள்கிறேன்.
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.

1 Comments

Previous Post Next Post