இனையத்தில் குடும்ப அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

வெண்ணிமுத்து அய்யனார் துணை

அனைவருக்கும் வணக்கம் தற்போது ரேஷன் கார்டு இனையத்தில் எப்படி பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்.நாம் அனைத்து இடங்களுக்கும் ரேஷன் கார்டு எடுத்து செல்ல முடியாத போது இது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை உங்களுக்கு தற்போது  பார்ப்போம்.நீங்கள் ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்ய உங்கள் மொபைல் எண் கட்டாயம் ரேஷன் கார்டு உடன் இனைக்கப்பட்டிருக்க வேண்டும்.

படி:1
முதலில் TNEPDS வலைதளத்திற்கு செல்லவும்.TNEPDS வலைதளத்திற்கு செல்ல கீழே உள்ள கிளிக் பட்டனை கிளிக் செய்யுங்கள்



மேலே உள்ள பட்டனை கிளிக் செய்த உடன் இந்த பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும்.

படி:2
இங்கு சென்றவுடன் ரேஷன் கார்டில் இனைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை தரவும்.மொபைல் எண்ணை தந்த உடன் சரீயான கேப்ட்சா குறியீடை(CAPTCHA) தரவும்
இந்த கேப்ட்சா குறியீடு ஒவ்வொரு முறையும் மாறிக் கொண்டே இருக்கும்.

படி:3
உங்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய கடவுச் சொல் ஒன்று வரும் (OTP). அதை கொடுக்கப்பட்ட கட்டத்தில் உள்ளீடு செய்யவும்.
படி:3
ஒடிபி உள்ளீடு செய்து உடன் உங்கள் ரேஷன் அட்டையின் விவரங்களை காட்டும்.



படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மின்னனு அட்டை கோப்பு பதிவிறக்கத்தை கிளிக் செய்து உங்கள் குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதனால் நாம் அனைத்து இடங்களுக்கும் ரேஷன் கார்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Post a Comment

Previous Post Next Post