பழங்காலத்தில் ஆடவர் விளையாட்டுகள்

ஆடவர் விளையாட்டுகள்:  



பழங்காலத்தில் ஆடவர் விளையாட்டுகள்
விளையாட்டாக மட்டும இல்லை தனது உடல் வலிமையை எடுத்துக் கூறும் விதமாக ஆடவர் விளையாட்டுகள் அமைந்திருந்தன.

புனலாடுதல்:

பெண்கள் பலர் சூழ்ந்து நிற்க ஆடவர்கள் தங்கள் வீரத்தை காட்டும் விதமாக நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளைகளை உடைய மருத மரத்தினின்று ஆழமிக்க கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கி கிணற்றின் அடியில் இருக்கும் மணலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த பெண்களிடம் வீரத்தைக் காட்டும் விதமாக மணலை காண்பிப்பர் இதுவே புனலாடுதல் விளையாட்டாகும்.

வேட்டையாடுதல்:

வேடுவர்கள் வேட்டையை தம் தொழிலாகக் கொண்டிருந்தனர் ஆனால் மன்னர்களோ வேட்டையை வீரமிக்க விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் கருதினார் வல்வில் ஓரியும் கோப்பெரு நற்கிள்ளியும் சிறந்த வேட்டையாளர்களாக சங்க காலத்தில் திகழ்ந்தனர் புறநானூற்றில் பல மன்னர்களின் வேட்டை ஆடும் திறனானது காட்டப்பட்டுள்ளது.

ஏறு தழுவுதல்:

முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது முரசு அதிர தொழுவத்திலிருந்து காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும் கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர்.முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்கள் ஏறுதழுவுதல் மேற்கொள்வர்.அத்தகு வீரர்களை ஆயிரம் குடிப்பெண்கள் விரும்பி மணந்தனர்.

கோழி போர்:

வீரம் உடைய தமிழர்கள் ஆட்டுக்கிடாய் களையும் கோழி,காடை,கௌதாரி முதலான பறவைகளையும் பழகி போரிடச் செய்து விளையாடி மகிழ்வர்.இதனை குப்பைக் கோழித் தனிப் போர போல என்று குறுந்தொகை வரிகள் எடுத்துரைக்கின்றன சோழ நாட்டின் தலைநகரமான உறையூரில்  வீரக் கோழிகள் அதிகம் இருந்தமையால் அது கோழியூர் எனவும் அழைக்கப்பட்டது

சிலம்பாட்டம்:

பழங்காலம் முதல் தமிழர்கள் விளையாடும் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் இருந்து வருகிறது நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றியின் உயரம் வரை இருக்கும் தடியை சுற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டம் ஆகும இதனை கம்பு விளையாட்டு எனவும் கூறுவர்

Tnpsc குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வில் அலகு 8 மற்றும் 9யை எதிர்கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post