திருக்குறள்:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
காமம், கோபம், மயக்கம் இவை மூன்றின் பெயர்களை கூட நம் மனதில் இருந்து நீக்கிவிட்டால் பிறவி துன்பம் கெடும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
நெருப்பினால் சுட்டாலும் அந்த வடு ஒருவனுக்கு ஆறிவிடும்.ஆனால் ஒருவன் மனம் புண்படும் படி பேசுவது ஆறாத வடுவாய் என்றும் நிலைத்திருக்கும்.நாம் கோபப்படுவதால் தான் நம் வாயில் இருந்து தீர சொற்கள் வருகிறது.கோபப்படாமல் இருந்தால் நம் வாயில் இருந்து தீய சொற்கள் வராது.
கீதை:
இதே கருத்து பகவத் கீதையிலும் உள்ளது.
"நரகத்திற்கு மூன்று வாசல்கள் உண்டு அவை காமம், கோபம்,இறவன்மை (ஆசை) ஆகியவையாகும்.இவை மனிதனின் மனதை மாசுபடுத்துவது ஆகும்.ஆகையால் இம்மூன்றும் அறவே நீக்கப்பட வேண்டும்.இவை நம் சிந்தயை வளரவிடாது இம்மூன்று தீமைகளையும் களையும் ஒருவனே யோகியாவான்.இம்மூன்று தீமைகளையும் மனதில் இருந்து நீக்கிவிட்டால் பற்பல பிறவிகள் எடுத்து அல்லல் பட நேரிடும்"
(பகவத் கீதை 16:21)
ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகள் எல்லைக் கடக்கும் போது அதுவே மனிதனை நரக வாயிலுக்கு கூட்டிச் செல்கிறது.மனிதன் தனது ஞானத்தால் ஐம்புலன்களையும் அடக்க கற்றுக்கொண்டால் அது அவனை உன்னத நிலைக்கு அழைத்துச் செல்கிறது.சிறு வயது முதலே இவ்வாறான பழக்க வழக்கங்களில் நம் குழந்தைகளை ஈடுபாட செய்தால் அது அவர்கள் வாழ்க்கையில் நல்ல கர்மாவை அதிகரிக்கும்.
ஐம்புலன்களை அடக்கி வாழ்பவன் சொர்க்கத்தை அடைகிறான்.ஐம்புலன்களை அடக்காமல் அதன் வழியே செல்பவன் நரகத்தை அடைகிறான்.
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்