முதுமக்கள் தாழி நடுகல் வணக்கம் பற்றிய விளக்கம்.
தமிழர்கள் வாழ்வில் பிறப்பையும் இறப்பையும் சமமாக கருதி சடங்குகளை மேற்கொண்டனர் பிறப்பின் போதும் திருமணத்தின் போது செய்யப்படும் சடங்குகளை போலவே இறப்பின் போதும் சடங்குகளை மேற்கொண்டனர்.இறப்புச் சடங்குகள் பெரும்பாலும் இறந்தவருக்கு மரியாதை செய்யும்பொருட்டு அமைந்திருந்தன. இறப்புச் சடங்குகள் ஈமச்சடங்குகள் எனவும் அழைக்கப்பட்டது.
முதுமக்கள் தாழி:
மூத்தோர் வணக்கம் தமிழர்கள் போறறிய ஒரு வழக்கமாகும் வயதில் மூத்த முதியவர்கள் இயற்கை மரணத்தை எட்டிய போது அவர்களை மண்ணால் செய்யப்பட்ட தாழியில் வைத்து புதைத்தனர்.இவ்வழக்கம் ஆற்றங்கரையில் அமைந்த ஊர்களில் அதிகம் காணப்பட்டது இச்சடங்கானது தாழியிற் கவித்தல் எனவும் அறியப்படுகிறது.
முதுமக்கள் தாழி முறையைப் பொருத்தமட்டில் மூன்று விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தன.
- முதல் முறையானது இறந்த பின்பு சடலத்தை சம்மணமிட்டு அமர வைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தார்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்பானையில் வைத்து புதைப்பது.
- இரண்டாவது முறையானது இறந்த உடலை வெட்டவெளியில் கிடத்தி சில நாட்கள் ஆன பிறகு எஞ்சிய எலும்புகளை மட்டும் எடுத்து சிறிய அளவிலான மண்பாண்டத்தில் வைத்து புதைப்பது.
- மூன்றாவது முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பல் மட்டும் சிறிய கலயத்தில் இட்டு புதைப்பது.
நடுகல் வணக்கம்:
போரில் வீர மரணம் எய்திய வீரர்களுக்கு கல் நட்டு அவர்களை கடவுளாக வழிபட்டனர் பண்டைய தமிழர்கள். நடுகல் வணக்கம் பற்றி தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்த நடுகல்லில் வீரனுடைய உருவமும் பெயரும் அவனுடைய பெருமையும் எழுதப்பட்டன.
இந்த நாடுகளுக்கு மாலைகளும் மயில் தொகைகளும் சூடப்பட்டன.
பின்னர் வீரரின் புகழ்பாடி நல்லடக்கம் மேற்கொள்வர்.நடுகல் வணக்கம் பற்றி சங்க இலக்கியங்களில் புறநானூறு எடுத்துரைக்கின்றது.
Tags:
TNPSC