பண்டைய தமிழர் கற்பு வாழ்வின் அங்கங்கள்

கற்பு வாழ்வின் அங்கங்கள்:



சங்க இலக்கியங்கள் தமிழர் தம் மனச் சடங்குகளை ஆங்காங்கே பதிவுசெய்துள்ளன அகநானூற்றில் வெற்றி குறிப்புகள் மிகுதியாக காணப்படுகின்றன இலக்கியங்களின் அடிப்படையில் சடங்குகளை இருவகையாக பிரிக்கலாம்.

  1. முதன்மை சடங்குகள்
  2. துணையைப் சடங்குகள்
முதன்மை சடங்குகள்:

இன்றியமையாதனவாக கருதப்படும் சடங்குகள் முதன்மை சடங்குகள் ஆகும் இச்சடங்குகள் மூலமே திருமணம் நடைபெற்றது.

1) மங்கல நீராட்டுதல்

தமிழர் தம் திருமண சடங்கின் போது மங்கல நீராட்டுதல் என்பதனை முதன்மை சடங்காக மேற்கொண்டனர் கற்பில் சிறந்த பெண்கள் கூடி மணப்பெண்ணுக்கு மஞ்சள் தரித்த நீரினை கொண்டு தலையில் பூக்களையும் நெல்லையும் வைத்து நீராட்டுவது இந்நிகழ்வாகும்.

2)சிலம்பு கழித்தல்:

பெண்கள் காலில் அணியும் அணியில் சிலம்பும் ஒன்று. இந்த சிலம்பானது தனது சிறுவயது முதலே பெண்களுக்கு பெற்றோரால் அணிவிக்கப்படும். திருமணத்திற்குப் பொருத்தம் பார்த்து ஊரறிய பெற்றோர் அறிவித்து, மணப்பெண் தன் காலில் அணிந்துள்ள சிலம்பு திருமணத்திற்கு முன்பு ஒரு நன்னாளில் காலிலிருந்து கழற்ற பெரும் இந்நிகழ்ச்சியை சிலம்பு கழி நோன்பு எனக் குறித்தனர். பெண்ணை மணம் செய்து கொடுத்து தலைவன் வீட்டிற்கு அனுப்பும் போது பெண்ணானவள் தன் வாழ்வில் புதுக்குடியில் நுழைவதை அறிவிக்க பெற்றோர் இச்சடங்கினை மேற்கொண்டனர் சங்க காலத்திற்குப் பிறகு சிலப்பதிகார காலத்தில் பெண்கள் திருமணம் முடிந்த பின்னரும் கால் சிலம்பை அணிந்தனர் இவை ஆரிய சடங்குகள் கலப்பதால் நிகழ்ந்தன மேலும் திருமணத்தின்போது தீ வலம் வருதல் முறையும் ஆரிய சமூகத்திலிருந்து தமிழ் மரபில் கலக்கப் பெற்றது.

3) மலரணிதல்:

திருமணம் ஆக இருக்கும் மகளிருக்கு மலரிதழ் ஒரு சடங்காக நிகழ்த்தப் பெற்றது திருமணத்தின்பது கணவர் மனைவியின் கூந்தலில் மலரினை சூடுவார்.

4)வெண்ணூல் சூட்டுதல்:

திருமணமாகப் போகும் மகளிருக்கு வெண்ணூல்  கணவனால் மனைவிக்கு சூட்டப்படும் இவ்வழக்கமே பின்னாளில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் ஆக மாற்றம் பெற்றது.வெண்ணூல் என்பது வாழை இலையும் அருகம்புல்லும் கிழங்கையும் சேர்த்து கட்டிய மாலையாகும்.

முன்கை பற்றுதல்:

தலைவியின் பெற்றோர் தன் மகளை  தலைவனிடம் ஒப்படைக்கும் பொருட்டு அவள் கையைப்பற்றி தலைவனின் கையில் வைத்து வாழ்த்துக் கூறி ஒப்படைப்பர் இந்நிகழ்வினை ஆரியர்கள் பாணிக்கிரகணம் என குறிப்பிடுவர் முன்கை பற்றி கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறியுள்ளார்.

புதுச்சோறு சமைத்தல்:

மணமக்கள் முதன் முதலில் கணவன் வீட்டில் புது சோறு சமைத்தலையும் உணவிடுதலையும் ஒரு சடங்காகும் சிறப்பாகவும் கொண்டாடினர்.

துணைமச் சடங்குகள்:

முதன்மை சடங்குகள் நிகழ துணை செய்வனவாக அமைவது துணை சடங்குகளாகும் நன்னாள் பார்த்தல் அணி செய்தல், விளக்கேற்றுதல், இறைவணக்கம்,விருந்தளித்தல் துணைமை சடங்காகும்.

Post a Comment

Previous Post Next Post