MSME 10 லட்சம் வரை பிணையில்லா கடன்

MSME 10 லட்சம் வரை பிணையில்லா கடன்:

தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய  மக்களுக்கு உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேவையான தகுதிகள்:

  1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
  2. குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். 
  3. அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  4. ஆண்டு வருமானம் 5,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
பயன்கள்:

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படும். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள்:
  1. ஆதார் அட்டை
  2. மாற்று சான்றிதழ் (TC)
  3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  4. இருப்பிட சான்று
  5. வாக்காளர் அடையாள அட்டை
  6. சாதி சான்றிதழ்
  7. ஜி.எஸ்.டி(GST) எண்ணிடப்பட்ட விலைப்பட்டியல்.
  8. குடும்ப அட்டை.
  9. நோட்டரி பப்ளிக்கிடம் உறுதி பத்திரம்.

விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்கும் முன் மேலே உள்ள ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளவும்.இப்பொழுதே விண்ணப்பிக்க கீழே உள்ள கிளிக் பட்டனை கிளிக் செய்யவும்

தங்களது விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மாவட்ட தொழில் மைய மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதற்கான குறுச்செய்தி தங்களது கைபேசிக்கு வரும்.

அதன் பிறகு சான்றிதழை சரிபார்க்க உங்களை மாவட்ட தொழில் மைய மண்டலத்திற்கு உங்களை நேரில் அழைப்பார்கள்.

குறிப்பு:
1)நேரடி விவசாயம் ஆடு,மாடு, கோழி, பட்டுப்புழு வளர்ப்பிற்கு MSME கடன் வழங்குவது இல்லை.
2)1000000 வரை பிணையமில்லா கடன் வழங்கப்படும்.அதற்கு மேலும் வாங்கினால் ஏதேனும் பிணையம் கொடுக்க வேண்டும்.

1 Comments

  1. Nice of Your Blog . Thanks for sharing useful information with us.
    To Know more about MSME training visit: Walmart Vriddhi - MSME Training program

    ReplyDelete
Previous Post Next Post