பண்டைய தமிழர் கலவு வாழ்வின் அங்கங்கள்:
ஊர் அறியாத வண்ணம் களவு வாழ்வில் ஈடுபடும் மனம் ஒத்த தலைவனும் தலைவியும் சமூகத்தால் பல வகைகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர் முறையான கற்பு வாழ்வையே அவர்கள் ஆதரித்தனர் களவு வாழ்வில் ஈடுபட நினைக்கும் ஆணையும் பெண்ணையும் தன் செயல்கள் மூலம் பெற்றோர்கள் கட்டுப்படுத்தினர் மேலும் தலைவியும் தலைவனும் இதனை எதிர்த்து நின்றனர்.அவை பின்வருமாறு.
இற்செறிப்பு:
ஒரு தாய் கட்டுப்பாடின்றி வெளியில் செல்லும் தன் மகளை பார்த்து அவள் வயது வந்த பெண் என்பதை நினைவுறுத்தி வீட்டிலேயே இருக்குமாறு படிப்பது இற்செறிப்பு எனப்படும்.
உடன் போக்கு செல்லுதல்:
பெற்றோர் அறிந்த காதலுக்கு தடை ஏற்படும் என்று அஞ்சிய காதலர் தம்முடைய வீட்டிலிருந்து வெளியே செல்வது உடன்போக்கு செல்லுதல் ஆகும் அப்போது பெற்றோர் அவர்களைத் தேடி சென்றதை பற்றி பல இலக்கியங்கள் விவரிக்கின்றன உடன்போக்கு செல்லுதல் தவிர்ப்பதே பெற்றோர் தலைவியை முன்னரே இற்செறிப்பு செய்தனர்.
அறத்தொடு நிற்றல்:
களவு வாழ்வில் ஈடுபடும் தலை மக்களின் வாழ்வைக் கற்பு வாழ்வாக மாற்ற எண்ணி தோழி முதலானோர் உரியவரிடம் எடுத்துரைப்பது அறத்தோடு நிற்றல் எனப்பட்டது தலைவி தோழிக்கும் செவிலி(வளர்ப்பு தாய்)தாய்க்கும் தாய் தந்தை இடத்தும் அறத்தோடு நின்று தலைவன்-தலைவி இடையிலான காதலை எடுத்துரைப்பர்.
மடலேறுதல்:
பெற்றோர்களின் எதிர்ப்பால் தலைவியைப் பிரிந்த தலைவன் தன்னுடைய காதலை ஊரறியச் செய்ய மடலேறுதல் நிகழ்வினை நடத்துவான் தலைவியை அடைய முடியாத தலைவன் உடல்முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கொடியுடன் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி நிற்க பிறர் அவனை இழுத்துச் செல்வர்.இந்நிகழ்வு மடலேறுதல் என அழைக்கப்பட்டது.பனை மட்டையால் செய்யப்பட்டதால் குதிரை வடிவம் மடல் என அழைக்கப்பட்டது.