வெண்ணிமுத்து அய்யனார் துணை
1)தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இவ்வருட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &AH) உள்ளிட்ட பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இறுதிநாள் செப்டம்பர் 28 (28/09/2020). சென்ற வருட கட் ஆஃப் மதிப்பெண்கள் விவரத்தை படத்தில் காணலாம். இந்தப்படிப்பிற்கு நீட் தேர்வு தேவை இல்லை. பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் + வேதியியல், இயற்பியல் மதிப்பெண்களை வைத்து கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும்.
2)நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு.
தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் - மின் வாரியம்.
தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற செப்.21 முதல் அக்.31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொகையை செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Tags:
அரசு அறிவிப்புகள்