வெண்ணிமுத்து அய்யனார் துணை
தமிழ்நாடு சீருடை பணியாளருக்கான பொதுத்தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான பொதுத்தேர்வுக்கான பொதுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
மொத்த காலிப்பணியிடங்கள் 10906.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
காவல்துறை:
- இரண்டாம் நிலை காவலர் மாவட்ட மாநகர ஆயுதப்படைக்கு மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3784. இதில் ஆண்களுக்கு 685, பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 3099.
- இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை தெரிவிக்கும் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6545. இதற்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
சிறைத்துறை:
- இரண்டாம் நிலை சிறைக்காவலர், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 119, இதில் ஆண்களுக்கு 112 பெண்களுக்கு 7.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை:
- தீயணைப்பாளர் பணிக்கு மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 458, இதற்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள்.
இதைத் தவிர 72 பின்னடைவு காலிப் பணியிடங்கள்.
ஊதிய விகிதம்:
ரூபாய் 18,200-52900.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1/07/2020 அன்று 18 வயது முடிந்திருக்க வேண்டும். 24 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், சீர்மரபினர் இவர்களுக்கு உச்ச வயது வரம்பானது 26.
- ஆதரவற்ற விதவைகளுக்கு 35.
- திருநங்கைகளுக்கு 29.
- ஆதிதிராவிடர்/ஆதி தராவிடர் மற்றும் பழங்குடியினர் இவர்களுக்கு வயது உச்சவரம்பு 29.
வகுப்புவாரி இட ஒதுக்கீடு:
- பொதுப் போட்டி- 31%
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-26.6%
- பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்-3.5%.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் மற்றும் சீர்மரபினர-20%.
- ஆதிதிராவிடர்-15%.
- அருந்ததியினர் வகுப்பினர்-3%.
- பழங்குடியினர்-1%.
தேர்வு முறைகள்:
- எழுத்து தேர்வு-80 மதிப்பெண்கள்
- உடல்கூறு அளத்தல்-மதிப்பெண்கள் இல்லை
- உடல் தகுதி தேர்வு-மதிப்பெண்கள் இல்லை
- உடல்திறன் போட்டிகள்-15 மதிப்பெண்கள்.
- சிறப்பு மதிப்பெண்கள்-5 மதிப்பெண்கள்.
மார்பளவு ஆண்களுக்கு மட்டும்:
சாதாரண நிலையில் 81 விரிந்த நிலையில் 86.
உயரம்:
- பொதுப் போட்டி,பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்-ஆண்களுக்கு 190 செ.மீ, பெண்களுக்கு 159செ.மீ
- ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர்-ஆண்களுக்கு-167 பெண்களுக்கு-157
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Tags:
அரசு அறிவிப்புகள்