மின் வாரிய அதிகாரிக்கு கடிதம்

மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுவது எப்படி?

மின் வாரிய அதிகாரிக்கு எவ்வாறு விண்ணப்பம் எழுதுவது என்று தற்போது பார்ப்போம்


அனுப்புநர்
உங்கள் பெயர்,
முகவரி,
வசிக்கும் இடம்,
வட்டம்,
மாவட்டம்.
பெறுநர்
மின் வாரிய அலுவலர்  அவர்கள்,
மின் வாரிய அலுவலகம்,
அலுவலகம் அமைந்துள்ள இடம்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்
பொருள்: பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சரி செய்வது தொடர்பாக.

எங்கள் ஊர் (ஊரின் பெயர்), எங்கள் ஊரில் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளன.இதனால் இரவில் நடந்து செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது, திருடர்கள் பயமும் அதிகரித்துள்ளது. பெண்கள், முதியோர்கள் மிகவும் சிரமப் படுகிறார்கள்.எனவே எங்கள் பகுதியில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சரி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,

உங்கள் பெயர்

உறையின் மேல் எழுத வேண்டிய முகவரி:

பெறுநர்:

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மாவட்டத்தின் பெயர்.

Post a Comment

Previous Post Next Post