தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் சாதனைகள்
தமிழ் கலாச்சாரத்தில் குறுகிய காலமே முதலமைச்சராக இருந்த அண்ணா ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது.அண்ணாவின் சாதனைகளின் பட்டியல் பின்வருமாறு
- 1967-ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சரானார்.
- இவர் தனது பதவிக்காலத்தில் 1967ல் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கினார்.
- ரூ1-ற்கு படி அரிசித் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது.
- கூவம் மேம்பட்டு திட்டத்தை இவர் தொடங்கி வைத்தார்.
- முதலமைச்சரான அண்ணாதுரை 1969 லவ் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்.
- சமூகநீதி மற்றும் பகுத்தறிவுவாதத்தை ஊக்குவிப்பராக இருந்த இவர் ஒருமுறை அரசாங்க அலுவலகங்களில் எந்த மத உருவப்படங்களையும் காட்சிப்படுத்தல் கூடாது என உத்தரவிட்டார்.
- வாய்மையே வெல்லும்-மாநில பொன்மொழி வாசகத்தை அண்ணா கொண்டு வந்தார்.
- திருவில்லிபுத்தூர் கோபுரம்-மாநில சின்னம்.
- ஸ்ரீ என்னும் சமஸ்கிருத சொல்லிற்கு பதிலாக திரு என்று மாற்றம் செய்தார்.
- மாநிலத்தின் அலுவல் மொழியாக இருமொழி கொள்கை உருவாக்கம்-1969.
- 1968ல் மாநில பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூபாய் 9 லட்சத்தை வழங்க ஒப்புதல் அளித்தார்.
- யுனெஸ்கோ ஆதரவுடன் 1967-ல் உலக தமிழ் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.