
- பொதுவாக பீடபூமிகள் என்பது தட்டையான மேல்பகுதி கொண்ட மலைகள் என்று கருதப்படுகிறது. ஆனால் வரையறைப்படி மிகப்பெரிய தட்டையான நிலப்பகுதி அதனுடைய சுற்றுப்புறத்தை காட்டிலும் ஏறக்குறைய 15000 அடிக்கும் மேல் உயர்ந்து மற்றும் குறைந்தது ஒரு செங்குத்து பகுதி கொண்ட அமைப்பாக வரையறுக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டின் சேர்வராயன் குன்றுகளுக்கு மேற்கில் காணப்படும் பாராமஹால் பீடபூமி (தர்மபுரி பீடபூமி) மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாகும்.
- நீலகிரியிலிருந்து தர்மபுரி வரை உள்ள பகுதியை கோயமுத்தூர் பீடபூமி என்றழைக்கிறோம். இதில் சேலம், கோயமுத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் அடங்கும். நீலகிரி பீடபூமி மைசூர் பீடபூமியில் இருந்து மேயாற்று நீரால் பிரிக்கப்படுகிறது.
- சிகுர் பீடபூமி என்பது ஒரு பீடபூமி இது தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடர்களை கொண்ட மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது.
- நீலகிரி உயிர்கோள பாதுகாப்பு அமைப்பு சிகுர் பீடபூமி மற்றும் நீலமலைத் தொடர்களை உள்ளடக்கி உள்ளது. இது UNESCO உயிர்கோள பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதி ஆகும்.
- நீலகிரி இவ்விரு பீடபூமி பிரிவுகளுக்கு இடையே பல தனித்தக் குன்றுகள் காணப்படுகின்றன. இவ்வகை குன்றுகளுள் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை ஆகும்.