- தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. தொட்டபெட்டா சிகரம் தமிழ் நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத் தொடரும், கிழக்கு மலைத் தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று சேர்கின்றன.
- தமிழ்நாட்டின் நீலகிரியிலிருந்தும் கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர்.
- மேற்கு தொடர்ச்சி மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25 கி.மீ. நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகிறது. பாலக்காட்டு கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்திய மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.
- கம்பம் பள்ளத்தாக்கு, தேக்கடி மலைகள், வருஷநாடு மலைகள் மற்றும் கொடைக்கானல் மலைகள் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. வருஷ நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி, செங்கோட்டை என்று கணவாய் அழைக்கப்படுகின்றது.
- சமவெளிகளையும், பீட பூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய்கள் கடலூர் மாவட்டத்தை சமவெளி பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமி பகுதியோடும் இணைக்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாக காணப்படுகின்றது. இடைவெளிவிட்டு காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென் மேற்காக வேலூர், தருமபுரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவி காணப்படுகிறது.
இம்மலைப் பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறுப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
- வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மற்றும் ஏலகிரிமலைகள்.
- சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலை.
- விழுப்புரம் மாவட்டத்தில் கல்வராயன் மலை.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பச்சை மலை.
- நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை.
- தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்திலும் விரவியுள்ள சித்தேரி மலை.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சி மலை.
- கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை.
- சேர்வராயன் மலை (1500-1600 மீ) (9) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை ஆனைமலை (2700 மீ கேரளா).