- கடலோரச் சமவெளிகள் வடக்கே பழவேற்காடு ஏரியில் இருந்து தெற்கே கன்னியாகுமாரி வரை சுமார் 1000 கிலோ மீட்டர் நீளத்தில் பரவியுள்ளது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர சமவெளி தொன்றுதொட்டு சோழ மண்டல சமவெளி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
- ஆற்று சமவெளிகள் தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளின் செய்கையால் அமையப்பெற்றுள்ளது. வடக்கில் பாலாறு, செய்யாறு, பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகிய நதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- தெற்குப் பகுதியில் பாயும் வைகை,வைப்பார் மற்றும் தாமிரவருணி ஆகிய நதிகள் தென்னக ஆற்றுச்சமவெளிகளை உருவாக்கியுள்ளது.
- வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கில் ஆர்டிசான்' நீருற்றுகள் உள்ளன. வடக்கில் செங்கம் கணவாயும் தெற்கில் ஆத்தூர் கணவாயும் பீடபூமியையும் சமவெளியையும் பிரிக்கின்றன.
- வறண்ட தென்சமவெளிகள் மலையடிவாரத்தில் உயர்ந்த பகுதிகளாகக் உள்ளது. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
- தூத்துக்குடி கடற்கரைக்கு இணையாக 10மீ உயரத்திற்கு மேலான தேரி மணல் மேடுகள் காணப்படுகின்றன.