1. சமத்துவ உரிமை (சரத்து 14 - 18):
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு பற்றி சரத்து - 14 (article-14) குறிப்பிடுகிறது.
- சாதி, சமய, இன, பால், பிறப்பிட வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை பற்றி சரத்து - 15 (article-15) குறிப்பிடுகிறது.
- அரசு வேலைகளில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரத்து–16 (Article-16) குறிப்பிடுகிறது .
- தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல் (சரத்து – 17).
- இராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு (சரத்து - 18).
2. சுதந்திர உரிமை (சரத்து 19 - 22):
- இந்திய அரசியலமைப்பு விதி 19 ஏழு (7) அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது.
- குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு, (சரத்து - 20).
- உயிருக்கும் தனிப்பட்டச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு (சரத்து -21)
ஆரம்பக் கல்வி கற்பதற்கான உரிமை (சரத்து 21 A):
- கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிராகப் பாதுகாப்பு (சரத்து 22).
3. சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 23 மற்றும் 24):
- மனிதர்களை வியாபார பொருளாக கருதி விற்பது மற்றும் கட்டாய வேலை வாங்குவதை தடைசெய்தல் (சரத்து 23).
- 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, மற்றும் ஆபத்தான வேலைகளில் அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது (சரத்து 24).
4. சமயச் சுதந்திர உரிமை (சரத்து 25 - 28):
- மனசாட்சிப்படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை (சரத்து 25).
- சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை (சரத்து 26).
- சமய வளர்ச்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை (சரத்து 27).
- சமய போதனைகளுக்குச் செல்லாமலிருக்க உரிமை (சரத்து 28).
5. கலாச்சார மற்றும் கல்வி உரிமை (சரத்து 29-30) :
- சிறுபான்மையினர் மொழி, எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் உரிமை (சரத்து 29).
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை (சரத்து 30).
6. அடிப்படை உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் (சரத்து 31A, 31B மற்றும் 31C):
- வணிகத் தோட்டங்களை பெறுவதற்கான சட்டப் பாதுகாப்பு (சரத்து 31A).
- குறிப்பிட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான விதிமுறைகள் (சரத்து 31B).
- குறிப்பிட்ட வழிகாட்டும் நெறிமுறைக்கான சட்டப் பாதுகாப்பு (சரத்து 31C).
7. அரசியலமைப்பு வாயிலாக தீர்வு பெறும் உரிமை (சரத்து 32):
- அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என்பதை சரத்து-32 உறுதி செய்கிறது.
Tags:
TNPSC