மகாபாரத பதினெட்டுப் பர்வங்களின் விளக்கம்

வியாச பாரதத்தில் காணப்படும் பதினெட்டுப் பர்வங்களுக்கான பெயர்க் காரணங்கள்.

1. ஆதி பர்வம்:

கதைமாந்தர்களின் பிறப்பு, வம்சத்தின் தொடக்கம் முதலிய ஆரம்ப வரலாறு களைக் கூறும் பகுதி.

2. சபா பர்வம்:

துரியோதனன் நிர்மாணித்த சபா மண்டபத்தில் நடைபெற்ற சூதாட்டத்தைப் பிரதானமாக எடுத்துரைக்கும் பகுதி.

3. ஆரணிய பர்வம்:

வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்களின் காடுறை வாழ்வைப் பற்றி விவரிக்கும் பகுத.

4. விராட பர்வம்:

விராட நாட்டில் பாண்ட வர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதைப் பற்றி விதந்துரைக்கும் பகுதி. (மத்ஸ்ய நாட்டு மன்னவன் பெயர் விராடன். எனவே, அவன் நாடு விராட நாடு என்று கூறப்பட்டது).

5. உத்தியோக பர்வம்:

போரைத் தவிர்ப்ப தற்கான முயற்சிகளிலும், பிறகு, போர் நடப்பது உறுதியென்றானதும் படைகளைத் திரட்டும் முயற்சிகளிலும் பாண்டவர்கள் ஈடுபட்டதைச் சொல்லும் பகுதி. (உத்தியோகம் - முயற்சி).

6. பீஷ்ம பர்வம்:

கௌரவர் சேனையின் தலைமைப் பொறுப்பைப் பீஷ்மர் ஏற்றுப் போரிட்ட முதல் பத்து நாள் யுத்த நிகழ்வுகளைச் சித்திரிக்கும் பகுதி. (இப்பகுதியில்தான் பகவத் கீதை இடம்பெற்றுள்ளது).

7. துரோண பர்வம்:

கௌரவர் படைத் தலைமையைத் துரோணர் ஏற்றுப் போரிட்ட 11, 12, 13, 14, 15-ஆம் நாள் யுத்த சம்பவங்களை கூறும் பகுதி.

8. கர்ண பர்வம்:

கௌரவர் சைனியத் தலைமை யைக் கர்ணன் ஏற்றிருந்த 16, 17-ஆம் நாள் யுத்தக் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டும் பகுதி.

9. சல்லிய பர்வம்:

மத்திர நாட்டு வேந்தனான சல்லியன் கௌரவர் சேனாதிபதியாகிப் போரிட்ட கடைசி நாள் யுத்தத்தை விளக்கும் பகுதி.

10. சௌப்திக பர்வம்:

தூங்கிக் கொண்டி ருந்தவர்களை அசுவத்தாமன் கொன்றொழித்த நிகழ்வுகளை எடுத்தியம்பும் பகுதி. (சௌப்திகம்:-உறங்குபவர்களைத் தாக்கிக் கொல்லுதல்)

11. ஸ்திரீ பர்வம்:

 போரின் விளைவால் பெண்கள் அடைந்த சோகத்தைப் பெரும்பான்மையாக ப்பு, நவில்கிற பகுதி. (ஸ்திரீ - பெண்).

12. சாந்தி பர்வம்:

 யுத்தத்திற்குப் பின் அமைதி திரும்புவதைக் கூறுவது. பீஷ்மர் தர்மருக்கு அநேக நீதிகளை உபதேசிப்பது இப்பகுதியில்தான். (சாந்தி - அமைதி). 

13.அனுசாஸன பர்வம்:

முந்தைய சாந்தி பர்வத்தின் தொடர்ச்சியாய் அமைவது. இந்தப் ட பர்வத்திலும் பீஷ்மரின் உபதேசம் தொடர்கிறது. (அனுசாஸனம் - உபதேசம்). 

14. ஆஸ்வமேதிக பர்வம்:

பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததைப் பற்றிப் பேசும் பகுதி. (ஆஸ்வமேதிக பர்வம் - அசுவமேத யாகம் பற்றிய பகுதி).

15.ஆஸ்ரமவாஸிக பர்வம்: 

திருதராஷ்டிரன் முதலியோர் அரண்மனையைத் துறந்து விட்டு ஆஸ்ரம வாசம் மேற்கொண்டதை உரைக்கும் பகுதி.

16.மௌஸல பர்வம்:

ஓர் உலக்கையால் யாதவ இனத்திற்கு அழிவு நேர்ந்ததைத் தெரிவிக்கும் பகுதி. (மௌஸலம் - உலக்கையால் நடக்கும் யுத்தம்) 

17.மஹாபிரஸ்தானிக பர்வம்:

பாண்டவர்கள் இறுதிப் பயணத்தைத் தொடங்கியதை எடுத்துச் சொல்லும் பகுதி. 

18. சுவர்க்க  பர்வம்: 

தருமபுத்திரன் மேலேறிச் சொர்க்கத்திற்குள் சென்றதைப் பகர் கின்ற பகுதி. 

Post a Comment

Previous Post Next Post