மகாபாரதக் கதைமாந்தர்கள்



அகத்தியர்:

குறுகிய வடிவமும் பெருகிய தவ வலிமையும் கொண்ட முனிவர். சந்திர வம்ச மன்னனான நகுஷனைப் பாம்பாகப் போகும்படி சபித்தவர்.

அங்கார பர்ணன்: 

அர்ஜுனனுடன் போர் புரிந்து தோற்ற கந்தர்வன்.

அசுவத்தாமன்: 

துரோணாச்சாரியாரின் மகன். 

அதிரதன்:

கர்ணனின் வளர்ப்புத் தந்தை.

அபிமன்யு:

அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன். விராட மன்னன் மகள் உத்தரையை மணந்தவன்.

அரவான்:

அர்ஜுனனுக்கும் நாக மங்கை உலூபிக்கும் பிறந்தவன். பாண்டவர்களுக்காகக் களப்பலியானவன். 

அருந்ததி:

புகழ்மிக்க பதிவிரதையரில் ஒருத்தி. வசிஷ்ட மகரிஷியின் மனைவி.

அம்பாலிகை:

காசிராஜனின் மூன்றாவது புதல்வி. விசித்திரவீரியனின் மனைவி. பாண்டுவை ஈன்றவள்.

அம்பிகை:

காசிராஜனின் இரண்டாவது புத்திரி. விசித் திரவீரியனின் மனைவி. திருதராஷ்டிரனைப் பெற்றெடுத்தவள்.

அம்பை:

காசிராஜனின் மூத்த புதல்வி. பீஷ்மரிடம் விரோதம் பூண்டவள். சிகண்டியாக மறுஜென்மம் கொண்டவள்.

அர்ஜுனன்:

பாண்டவர்கள் ஐவரில் மூன்றாமவன். இந்திரனின் அனுக்கிரஹத்தால் குந்திக்குப் பிறந்தவன்.

அலாயுதன்:

இரவுப் போரில் கடோத்கஜனுக்கு எதிராகக் கௌரவர்களால் களமிறக்கப்பட்ட அரக்கன். 

இடும்பன்:

ஓர் அரக்கன். பீமனால் மாய்க்கப்பட்டவன். 

இடும்பி:

ஓர் அரக்கி. இடும்பனின் சகோதரி. பீமனால் மணக்கப்பட்டவள். கடோத்கஜனின் தாய். 

இந்திரன்:

தேவலோக வேந்தன். 

இந்திராணி:

இந்திரனின் மனைவி (சசிதேவி). 

உக்ரசேனர்:

கம்சனின் தந்தை. 

உத்தரை:

விராட வேந்தனின் மகள். அபிமன்யுவுக்கு மனைவி. 

உத்தரன்:

விராட வேந்தனின் மகன். 

ஊர்வசி:

தேவலோக மங்கையரில் ஒருத்தி.

ஏகலைவன்:

குரு பக்தியில் சிறந்த வில்லாற்றலில் மேம்பட்ட வேட்டுவ இளைஞன். இவனது வலக்கைக் கட்டை விரலைக் குருதட்சிணையாகத் துரோணர் கேட்டு வாங்கினார்.

கசன்:

தேவகுருவான பிருஹஸ்பதியின் மகன். சுக்கிராச்சாரியாரிடம் மாணவனாக இருந்தவன். சுக்கிரர் மகள் தேவயானியின் காதலுக்குப் பாத்திரமானவன்.

கங்கன்: 

அஞ்ஞாதவாசத்தின்போது தரும புத்திரனின் பெயர்.

கடோத்கஜன்:

பீமனுக்கும் இடும்பி என்ற ராட்சஸிக்கும் பிறந்தவன்.

கண்ணன்:

பாண்டவர்களின் மைத்துனன். கண்ண னின் தந்தை வசுதேவரும் பாண்டவர்களின் தாய் குந்தி யும் சகோதர சகோதரிகள்.

கந்தர்வர்கள்:

தேவர்களில் ஒரு பிரிவினர். மிக்க இசைத்திறமை வாய்ந்தவர்கள்.

கம்சன்:

கண்ணனின் தாய்மாமன். கண்ணனால் வதைக்கப்பட்ட கொடூரன்.

கர்ணன்:

திருமணத்திற்கு முன்பே குந்தியின் வயிற்றில் சூரிய பகவானின் அருளால் உதித்தவன். துரியோதனனின் நண்பன்.

கிந்தமர்: 

பாண்டுவுக்குச் சாபம் கொடுத்த முனிவர். 

கிருபர்:

பாண்டவர்களின் ஆரம்பக் கல்வியாசிரியர். 

கிருபி:

கிருபரின் சகோதரி. துரோணாச்சாரியாரின் மனைவி.

கிருதவர்மன்:

யாதவ தலைவர்களுள் ஒருவன். கௌரவர் தரப்புக்காகப் போரிட்டவன்,

கிருதாசி: 

அப்சரப் பெண்களில் ஒருத்தி. பரத்வாஜ முனிவரிடத்துத் துரோணர் தோன்றக் காரணமானவள்.

காந்தாரி:

திருதராஷ்டிரனின் மனைவி. சகுனியின் சகோதரி. கணவன் பார்வையில்லாதவன் என்பதால், தன் கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டு, தானும் பார்வையில்லாதவள் போல் ஆனவள்.

கீசகன்(கீட்சகன்):

விராட மன்னனின் மைத்துனன். திரௌபதியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவன்.

குந்தி:

பாண்டவர்களின் தாய். பிருதா என்றும் அழைக்கப்பட்டவள். கண்ணனுக்கு அத்தை. 

கௌசவி:

துருபதனின் மனைவி. 

கௌரவர்கள்:

திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகள். 

சகதேவன்:

மகத தேசாதிபதியான ஜராசந்தனின் மகன். யுத்தத்தில் பாண்டவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவனாக இருந்தவன்.

சகாதேவன்:

பாண்டவர்கள் ஐவரில் இளையவன். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்திரிக்கு அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தவன்.

சகுனி:

காந்தாரியின் சகோதரன். கௌரவர்களின் தாய்மாமன்.

சஞ்சயன்:

திருதராஷ்டிரனின் அமைச்சர்களில் ஒருவன். போர்க்கள நிகழ்வுகளைத் திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைத்தவன்.

சந்தனு:

சந்திர வம்ச வேந்தனான பிரதீபனின் மகன். பீஷ்மருக்குத் தந்தை. 

சத்தியபாமா:

கிருஷ்ணரின் மனைவி 

சத்தியஜித்:

பாஞ்சால வீரர்களில் ஒருவன். குருக்ஷேத்திர யுத்தத்தில் தருமனைப் பாதுகாத்து உயிர்விட்டவன்.

சத்தியவதி:

சந்தனு வேந்தனின் இரண்டாம் தாரம். சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்னும் இருவரின் தாய். கன்னிகையாயிருந்த போது பராசர முனிவரோடு கலந்து வியாசரை ஈன்றெடுத்தவள்.

சரத்வான்:

ஒரு முனிவர். கிருபருக்கும் கிருபிக்கும் தந்தை.

சர்மிஷ்டை:

அசுரவேந்தன் விருஷ பர்வனின் மகள். தேவயானியின் தாதியாகி, அவளுடைய கணவன் யயாதி யுடன் ரகசிய உறவு வைத்திருந்தவள். யயாதிக்குத் தன் இளமையைக் கொடுத்தவனான பூருவைப் பெற்றெடுத்தவள்.

சாத்யகி:

யாதவ தலைவர்களில் ஒருவன். கண்ணனின் நண்பன். யுத்தத்தில் பாண்டவர் தரப்பில் இடம் பெற்றவன்.

சாம்பன்:

கண்ணனின் மகன்களில் ஒருவன். ஜாம்பவதி இவன் தாய்.


சால்வன் 1:(சால்வன் என்னும் பெயரில் இருவர் உள்ளனர்)

சௌபாலம் என்னும் தேசத்தின் அரசன். அம்பையின் காதலன். பீஷ்மரால் அம்பை தூக்கிச் செல்லப் பட்டபின் அந்த அம்பையின் காதலை நிராகரித்தவன்.

சால்வன் 2:

சிசுபாலனின் நண்பன். கண்ணனை எதிர்த்தவன். அந்தக் கண்ணனால் மாய்க்கப்பட்டவன்.

சிகண்டி: 

பீஷ்மரைப் பழி வாங்கத் துடித்த அம்பையின் மறுபிறப்பு. துருபத வேந்தனுக்குப் பெண்ணாகப் பிறந்து, பின் ஆணாக மாறியவன். குருக்ஷேத்திர யுத்தத்தில் பீஷ்மர் சாய்க்கப்படுவதற்குக் காரணமாயிருந்தவன்.

சிசுபாலன்:

சேதி தேசத்து வேந்தன். ராஜசூய யாகத் தின்போது கண்ணனால் மாய்க்கப்பட்டவன்.

சித்திராங்கதன்:

சந்தனு வேந்தனுக்கும் சத்தியவதிக் கும் பிறந்த முதல் மகன். ஒரு கந்தர்வனால் கொல்லப் பட்டு அற்ப ஆயுளில் மடிந்தவன். பீஷ்மரின் சகோதரன்.

சித்ராங்கதை:

பாண்டிய வேந்தனின் மகள். அல்லி ராணி என்று அறியப்பட்டவள். அர்ஜுனனின் மனைவியரில் ஒருத்தி. பப்ருவாகனனின் தாய். 

சுக்கிராச்சாரியார்:

அசுரர்களின் குரு. சுசர்மன் - திரிகர்த்த நாட்டு மன்னன். யுத்தத்தில் கௌரவர்களின் தரப்பில் இருந்தவன்.

சுதட்சிணன்: 

கௌரவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவன். 

சுதேட்சணை:

விராட மன்னனின் பட்டத்தரசி.

சுபத்திரை:

கண்ணனின் தங்கை. அர்ஜுனனின் தாரம். அபிமன்யுவின் தாய். 

சுவலன்:

சகுனியின் தந்தை. 

சூரசேனர்:

வசுதேவரின் தந்தை. கண்ணனின் பாட்டன். 

சைரந்திரி:

அஞ்ஞாத வாசத்தின்போது திரௌபதியின் பெயர்.

தந்திரிபாலன்:

அஞ்ஞாத வாசத்தின்போது சகாதேவன் ஏற்றிருந்த பெயர்.

தர்மதேவன்(யமன்):

இவரது அருளால்தான் குந்தி தேவியிடத்து யுதிஷ்டிரன் தோன்றினான். நச்சுப் பொய்கையினருகில் யுதிஷ்டிரனைச் சோதித்தவன்.

தாமக்ரந்தி:

அஞ்ஞாத வாசத்தின்போது நகுலன் ஏற்றிருந்த நாமம்.

திருஷ்டத்யும்னன்:

துருபத வேந்தனின் மகன். வேள்வி நெருப்பில் உதித்தவன். திரௌபதியின் அண்ணன். துரோணரைக் கொன்றவன்.

திருஷ்டகேது:

பாண்டவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவன்.

திருதராஷ்டிரன்: 

விசித்திரவீரியனின் மனைவியான அம்பிகையிடத்து வியாசரால் கருவாகிப் பிறந்தவன். பிறவிக் குருடன். கௌரவர்களின் தந்தை. பாண்டுவின் அண்ணன்.

திரௌபதி: 

துருபத மன்னனின் மகள். வேள்வி நெருப்பில் தோன்றியவள். பாண்டவர்களின் மனைவி.

துச்சாதனன்:

கௌரவர்களில் இரண்டாமவன். திரௌபதியின் துகிலுரிந்தவன்.

துருபதன்:

பாஞ்சால தேசத்து வேந்தன். சிகண்டி, திருஷ்டத்யும்னன், திரௌபதி ஆகிய மூவருக்கும் தந்தை.

துரியோதனன்:

கௌரவர்களில் மூத்தவன். தந்தை திருதராஷ்டிரனின் தலைமையின்கீழ் அஸ்தினாபுரியில் அரசிருந்தவன்.

துரோணர்:

குரு வம்சத்து ராஜகுமாரர்களின் ஆசிரியர். கிருபரின் சகோதரியான கிருபியை மணந்தவர். அசுவத்தாமனின் தந்தை.

துர்வாசர்:

கோபம் மிக்க முனிவர். குந்தி தேவிக்குச் சந்தான பாக்கிய மந்திரத்தைக் கொடுத்தவர். 

தேவகி:

கிருஷ்ணனின் தாய். வசுதேவரின் மனைவி. 

தேவயானி:

அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள்.

தேவ விரதன்:

பீஷ்மரின் இயற்பெயர். 

தௌமியர்:

பாண்டவர்களின் குருவாக இருந்து வழி காட்டிய ரிஷி.

நகுலன்:

பாண்டவர்கள் ஐவரில் நாலாமவன். பாண்டு வின் இரண்டாவது மனைவி மாத்திரிக்கு அஸ்வினி தேவர் களின் அருளால் பிறந்தவன்.

நகுஷன்:

சந்திரவம்ச வேந்தர்களுள் ஒருவன். அகத்தியரின் சாபத்தால் பாம்பானவன்.

நளாயினி:

புகழ்பெற்ற பதிவிரதையரில் ஒருத்தி. மௌட்கல்ய முனிவரின் மனைவி. இவளே மறுபிறப்பில் திரௌபதியாகத் தோன்றுகிறாள்.

நாரதர்:

திரிலோக சஞ்சாரியான மகரிஷி. 

பகதத்தன்:

ப்ராக்ஜோதிஷ நகர வேந்தன். யுத்தத்தில் கௌரவர் பக்கம் இருந்தவன்.

பகாசுரன்:

ஏக சக்கர நகரில் பீமனால் கொல்லப்பட்ட அரக்கன்.

பப்ருவாகனன்: 

அர்ஜுனனுக்கும் சித்திராங்கதை என்னும் அல்லிராணிக்கும் பிறந்தவன். 

பலராமன்:

கண்ணனின் அண்ணன். 

பரசுராமர்:

ஷத்திரியர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்த பிராமணர். பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோருக்குக் குரு.

பரதன்:

துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன். 

பரத்வாஜர்:

ஒரு முனிவர். துரோணரின் தந்தை. 

பராசரர்:

வியாசரின் தந்தை. 

பரீட்சித்:

அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறந்தவன். பாண்டவர்களின் பேரன்.

பர்பரிகன்:

கடோத்கஜனின் மகன். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பாரதப் போரைப் பார்த்துக் கொண்டிருந்தவன்.

பாகுலிகன்:

கௌரவர்களின் படைத் தளபதிகளுள் ஒருவன்.

பாண்டவர்கள்:

பாண்டு மன்னனின் ஐந்து புதல்வர்கள் (யுதிஷ்டிரன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்).

பாண்டு:

விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகையிடத்து வியாசரால் கருவாகிப் பிறந்தவன். வெளுத்துப்போன உடலுடையவன். பாண்டவர்களின் தந்தை. திருதராஷ்டிரனின் தம்பி.

பானுமதி:

துரியோதனன் மனைவி. கலிங்க நாட்டு இளவரசி.

பிரத்யும்னன்:

கண்ணனின் மகன். ருக்மிணி இவன் தாய்.

பிரமிளாதேவி:

கௌரி வனத்திற்குள் இருந்த நாரீபுரத் தின் ராணி. அர்ஜுனனின் மனைவியரில் ஒருத்தி.

பிருகதஸ்வரர்:

வனவாசத்திலிருந்த பாண்டவர்களுக்கு ஆறுதலும் அறிவுபதேசங்களும் வழங்கிய ஒரு முனிவர். 

பிருகத்ரதன்:

ஜராசந்தனின் தாய்.

பிருகன்னளை:

அஞ்ஞாதவாசத்தின் போது அர்ச்சுனனின்  பெயர்.

பிரஹஸ்பதி:

தேவர்களின் குரு.

பீமன்:

பாண்டவர்கள் ஐவரில் இரண்டாமவன், பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு வாயுதேவனின் அருளால் பிறந்தவன்.

பீஷ்மர்:

சந்தனு வேந்தனுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர். தந்தையின் இன்ப வாழ்வுக்காக,  பிரம்மச்சாரியாக இருப்பேன்' என்று சபதம் ஏற்றவர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாட்டனார்.

புரோசனன்:

அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்வதற்கென்று துரியோதனனால் நியமிக்கப்பட்டிருந்த பணியாள். 

பூரிசிரவசு:

யுத்தத்தில் கௌரவர் பக்கமிருந்த வீரன். 

மாயன்:

இந்திரப் பிரஸ்தத்தில் பாண்டவர்களுக்கு மாளிகை ஏற்படுத்திக் கொடுத்த அசுரத் தச்சன்.

மாண்டவ்யர்: 

தவறாகக் கழுவில் ஏற்றப்பட்டவர். யமனை மனிதனாகப் பிறக்கும்படி சபித்தவர். நளாயினிக்குச் சாபமிட்டவரும் இவரே.

மாதலி: 

இந்திரனின் தேரோட்டி. அர்ஜுனனைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றவன்.

மாத்திரி:

பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுல சகாதேவர்களின் தாய். சல்லியனின் சகோதரி.

மார்க்கண்டேயர்:

வனவாசத்தின்போது பாண்டவர்களுக்குக்  கதைகள் சொன்ன முனிவர்.

மைத்ரேயர்:

நியாயமாக நடந்து கொள்ளும்படி துரியோதனனை எச்சரித்த மகரிஷி.

 மௌட்கல்யர்: 

பதிவிரதை நளாயினியின் கணவர். யசோதை - கண்ணனின் வளர்ப்புத் தாய். யயாதி - சந்திரவம்ச வேந்தர்களில் ஒருவன். தேவ யானி, சர்மிஷ்டை ஆகியோரின் கணவன்.

யுதிஷ்டிரன்:

பாண்டவர் ஐவரில் மூத்தவன். பாண்டு வின் முதல் மனைவியான குந்தியிடம் தர்மதேவனின் அருளால் தோன்றியவன்.

யுயுத்சு:

திருதராஷ்டிரனுக்கும் ஒரு பணிப் பெண்ணுக்கும் பிறந்தவன். துரியோதனுடைய அதர்மப் போக்கை எப்போதும் ஆட்சேபித்து வந்தவன். யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இணைந்து கொண்டவன்.

கௌரி வனம்:

உள்ளே நுழையும் ஆண்களையெல்லாம் பெண்களாக மாற்றும் அதிசயவனம்.

சேதி நாடு:

சிசுபாலன் ஆண்ட தேசம். 

துவாரகை:

கண்ணன் ஆட்சிபுரிந்த தீவு.

துவைத வனம்:

வனவாசத்தின்போது பாண்டவர்கள் தங்கியிருந்த இடங்களில் ஒன்று.

பத்ரீ ஆஷ்ரமம்:

வனவாசத்தின்போது தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பாண்டவர்கள் சில நாட்கள் தங்கியிருந்த மிக ரம்மியமான இடம்.

பாஞ்சாலம்: 

துருபத வேந்தன் ஆண்ட தேசம்.

பிரமாணகோடி:

பால்ய காலத்தில் பீமனுக்குத் துரியோதனன் நஞ்சு ஊட்டிய இடம்.

மகத தேசம்:

ஜராசந்தன் ஆண்ட நாடு.

மதுராபுரி:

கம்சனாலும் பிறகு கண்ணனாலும் ஆளப்பட்டு, அதன்பின்பு ஜராசந்தனால் எரியூட்டப்பட்ட நகரம்.

மேரு:

விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இணைப் புப் பாலமாக உள்ள மலை. இதன் வழியே ஏறித் தரும புத்திரன் சொர்க்கம் சென்று சேர்ந்தான்.

ரைவத பர்வதம்:

துவாரகை நகருக்கு வெளியே இருந்த மலை.

வாரணாவதம்:

பாண்டவர்களை ஒழிக்கத் துரியோதனனால் அரக்கு மாளிகை எழுப்பப்பட்ட நகரம்.

விசாகயூபம்:

பாண்டவர்கள் வனவாசத்தின் போது வசித்திருந்த இடங்களில் ஒன்று.

விராட நாடு: 

பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்த இடம். மத்ஸ்ய தேசம் என்பது இதன் பெயர். விராடன் என்பவன் ஆண்டதால் விராட நாடு.

ராதை 1:(ராதை என்னும் பெயரில் இருவர் இருந்தனர்)

கர்ணனின் வளர்ப்புத் தாய். தேரோட்டி அதிரதனின் மனைவி. 

ராதை 2:

கண்ணனை மிகத் தீவிரமாகக் காதலித்த கோபியரில் ஒருத்தி. 

ருக்மிணி:

கண்ணனின் மனைவி. 

ருக்மி:

ருக்மிணியின் சகோதரன்.

ரேவதன்:

துவாரகையை ஆண்டவன். 

ரேவதி:

ரேவதனின் மகள், பலராமனின் மனைவி. 

லஷ்மணான்:

துரியோதனனின் மகன். லஷ்மணை துரியோதனனின் மகள். சாம்பனின் மனைவி.

லோமசர்:

அமராவதியில் அர்ஜுனன் நலமாயிருக்கிறான் என்பதை இதர பாண்டவர்களுக்கு எடுத்துரைப் பதற்காக இந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட முனிவர்.

வசிஷ்டர்:

அஷ்ட வசுக்களில் எட்டாவது வசு பூமியில் மானுடனாகப் பிறக்கும்படி சபித்த மகரிஷி.


வத்ஸலா:

பலராமனின் மகள்.

வல்லாளன்: 

அஞ்ஞாதவாசத்தின்போது பீமன் ஏற்றிருந்த பெயர்.

வஜ்ரன்:

கண்ணனின் மகனான பிரத்யும்னனின் பேரன்.

விகர்ணன்:

கௌரவர்கள் நூறு பேரில் ஒருவன். நியாயத்திற்காகக் குரல் கொடுத்தவன்.

விசித்திரவீரியன்:

சந்தனு வேந்தனுக்கும் சத்திய வதிக்கும் பிறந்த இரண்டாம் மகன்.அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரையும் மணந்தவன். நோய் வந்து இளமையிலேயே மடிந்தவன். பீஷ்மரின் சகோதரன்.

விதுரர்:

திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி. வியாச முனிவரால் ஒரு வேலைக்காரியின் கருவில் தோன்றியவர்.

விராடன் 

மத்ஸ்ய தேசத்து மன்னன். அஞ்ஞாத வாசத்தின்போது பாண்டவர்கள் இவனது நாட்டில்தான் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர்.

விருத்த ஷத்திரன்:

ஜயத்ரதனின் தந்தை. தாம் வாங்கியிருந்த வரம், தமக்கே கேடாகப் போகும்படியான நிலைக்கு உள்ளானவர்.

வியாசர்:

பராசர முனிவரின் மைந்தர். மஹாபார தத்தை இயற்றிய கர்த்தா.

வைசம்பாயனர்:

 ஜனமேஜயனுக்கு மஹாபாரதத்தை எடுத்துரைத்தவர்.

ஜயத்ரதன்:

சிந்து தேச மன்னவன். கௌரவர்களின் ஒரே சகோதரியான துச்சளையை மணந்தவன். 

ஜராசந்தன்:

கண்ணனின் விரோதி. 

ஜனமேஜயன்:

பரீட்சித்தின் மகன். 

ஜாலவதி:

அப்சரப் பெண்களில் ஒருத்தி. சரத்வான் என்ற முனிவரின் தவத்தைக் கலைத்து, கிருபர் - கிருபி பிறப்புக்குக் காரணமானவள்.

Post a Comment

Previous Post Next Post