பேருந்து வசதி வேண்டி விண்ணப்பம்

பேருந்து வசதி வேண்டி மாநகர பேருந்து இயக்குநருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.


அனுப்புநர்

பெயர்,

முகவரி,

இடம்.

பெறுநர்:

மாநகர போக்குவரத்து இயக்குனர்,

மாநகர போக்குவரத்து அலுவலகம்,

இடம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: போக்குவரத்து வசதி வேண்டி விண்ணப்பம்

வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எங்கள் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி,

நாள்:

இடம்:

இப்படிக்கு,

பெயர்.

உறைமேல் முகவரி:

பெறுநர்:

மாநகர போக்குவரத்து இயக்குனர்,

மாநகர போக்குவரத்து அலுவலகம்,

இடம்.

-------------------------------------------

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.அதில் உங்கள் மண்டலம் எது என தெரிந்து கொள்ள கீழே உள்ள கருத்துப்பெட்டியில் கேட்கலாம்.

9 Comments

  1. Replies
    1. விழுப்புரம் மண்டலம்

      Delete
  2. மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி வட்டம், அலங்கநல்லூர் ஒன்றியம்,இடையப்படடி கிராமம்...எங்கள் ஊர் எந்த மண்டலத்தில் உள்ளது..

    ReplyDelete
Previous Post Next Post