அதிகாரம் -13
அடக்கம் உடைமை
1.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும்
2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு
3.செறிவுஅறிந்து சீரமை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
4.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையிலும் மாணப் பெரிது,
5.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
6.ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல்
ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.
7.யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.
8.ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகாது ஆகி விடும்.
9.தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
10.கதம்காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கண்ணனும் தேவியும் பட்டதாரி ஆசிரியர்கள். இருவரும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இருவரும் அருணின் இரத்த உறவினர். தேவி பணக்காரி. கண்ணன் ஏழை. அத்துடன் தேவி பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்தவள். அத்துடன் திமிரும் ஆணவமும் உள்ளவள். அவள் கண்ணனின் குடும்பத்தவர்களை மதிப்பதில்லை. அதனால் இருவருக்குமிடையில் எந்நாளும் பிரச்சினைகள் வந்தபடி இருக்கும். அதனால் அவளை விட்டுப் பிரிந்து தனது பெற்றோருடன் பல மாதங்களாக வாழ்ந்து வருகிறான்.கண்ணன் பெற்றோருக்குப் பெருந்துன்பத்தையும் அவமானத்தையும் கொடுத்தது.அதனால் கண்ணனின் தந்தை அடிக்கடி சென்று அருணைச் சந்தித்து இருவரையும் ஒற்றுமையாக்கி விடும்படி கேட்பார்.
அன்று காலை அருணும் திருநாவுக்கரசும் தேவி வீட்டுக்குச் சென்றனர்.அவரைக் கண்டதும் தேவியின் முகம் மாறுபாடடைந்ததைக் அருண் கண்டு கொண்டார்.
அவள் திமிரானவள் என்று அவருக்குத் தெரியும்; தேவி நான் படிக்காதவன் நீ பட்டதாரிஆசிரியை. ஆசிரியர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக வேண்டும். பணம், பொருள், பதவி, அந்தஸ்து என்பன வாழ்க்கையைச் சிறப்பிப்பதில்லை. அவை இல்லாத பலர் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்ந்து வாழ்ந்து இன்பத்தை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையானது அடக்கம்.
அடக்கம் மனிதனைத் தேவனாக்கும். அடக்கமின்மை அசுரராக்கும். அடக்கம் தான் மனிதனுக்குப் பெருமையையும், புகழையும் தருவது.
அடக்கம் எல்லாம பிரச்சினைகளையம் தீர்த்து வாழ்க்கையை உயர்த்தும் என்பதை அறிவுடைய நீங்கள் இருவரும் உணரவில்லை” நிறுத்தினார் அருண்.
தேவி எதுவும் பேசவில்லை. உதடுகள் பேசத்துடித்தன.சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்; “வாழ்க்கை இன்பமாக வாழ்வதற்கு என்று நினைப்பவர்கள் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து வாழ்வதால் அவர்களது வாழ்வு மலையை விட உயர்ந்ததாக இருக்கும். பணிவோடு வாழ்வது பெருமயைக் கொடுக்கும். கற்றவர்கள்,பணமுள்ளவர்கள் பணிவுடன் வாழ்ந்தால் அது அவர்களுக்குப் புகழையும் செல்வத்தையும் கொடுக்கும். ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வதே அடக்கம்.
அது எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் சிறந்த பாதுகாப்பாக இருக்கும். நாவைக் காப்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். சொற்கள் சாகாவரம் பெற்றவை. தீய சொற்களால் கற்றவனது புகழ், மானம், உயர்வு யாவும் அற்றுப் போய்விடும். அவை கேட்பவனின் உள்ளத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடும். சினத்தை அடக்கி
கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கமுடன் வாழ்பவர்களைக் கடவுள் தேடி வருவார். பெண்கள் பொறுமையுள்ளவர்களாக, அன்புள்ளவர்களாக,
அடக்கமுடன் வாழ்பவர்களைக் கடவுள் தேடி வருவார். பெண்கள் பொறுமையுள்ளவர்களாக, அன்புள்ளவர்களாக, அடக்கமுள்ளவர்களாக வாழ்ந்தால் தான் குடும்பத்திற்குப் பெருமை.
அதனால் நடந்தவற்றை மறந்து மாதவனுடன் கூடிவாழ். பிரிந்திருந்து என்ன இன்பத்தைக் கண்டாய்? இனி உனது விருப்பம் என்று கூறிவிட்டு எழுந்தார் அருண்.
தேவியால் எதுவும் பேசமுடியவில்ல. அருணின் வார்த்தைகள் முள்ளாய் இதயத்தைக் குத்தின. ஊரவர் அருணை படிக்காத மேதை என்பார்கள். அது உண்மை என்று அவள் புரிந்து கொண்டாள். அவர் கூறுவது நியாயம் என அவளது மனம் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டது. தான் கணவனுடன் கூடிவாழ வேண்டும் என்று நினைத்துப் பார்த்தாள். அருண் சென்று விட்டார்.
நன்றி,
திரு கே.வி.குணசேகரம்
மா.ஆறுமுகதாசன்