மொகலாயர் காலத்தில், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதுமாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடப்பாக்கம் என்னும் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது.
இக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அமைந்துள்ளது. இந்தக்கோட்டை கி.பி .16 அல்லது 17-ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்களால் கட்டப்பட்டதாகும்.
திண்டுக்கல் நகரின் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோட்டை முன்பு “திண்டுக்கல் மலைக்கோட்டை" என்று அழைக்கப்பட்டது. மதுரை நாயக்க அரசர்களால் 1605-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்பு 18-ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னர்கள் வசமானது. மைசூரை ஆண்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் காலத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகத் திகழ்ந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு என்ற இடத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் 1613 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தமிழகத்தில் எஞ்சியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ளது. “ இந்தியாவிலுள்ள ஒன்றான எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்த கோட்டை இது-என்று மராட்டிய,மன்னரான சிவாஜி பாராட்டுமளவிற்கு, நன்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக விளங்கியது.ஆங்கிலேயர் இதனை கிழக்கின் ' ட்ராய்' என்று அழைத்தனர். சோழர்கள் ஆட்சிக் காலத்தில் 9-ஆம் நாற்றாண்டில் செஞ்சியில் சிறிய ஒரு கோட்டை கட்டப்பட்டது பின்னர், 13-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கோட்டை விரிவாக்கப்பட்டது.
நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ' மனோரா' என்ற நினைவுச் சின்னத்தைக் கட்டினார். இது தஞ்சைமாவட்டம் மல்லிப்பட்டினம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.230 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம், 8 அடுக்குகளில் அறுகோண வடிவில் அமைந்துள்ளது. இது மினாரட் (Minaret) என்ற சொல்லிலிருந்தே ' மனோரா' என்ற பெயரைப் பெற்றுள்ளது.
கி.பி. 1200-இல் கட்டப்பட்ட ராஜகிரிக் கோட்டை செஞ்சியில் அமைந்திருக்கிறது.ராஜகிரி என்ற சொல்லுக்கு அரசன் மலை என்பது பொருள்.
17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை பெரம்பலூருக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கர்நாடக நவாப்புக்கு கட்டுப்பட்டிருந்த சிற்றரசரால் கட்டப்பட்டது. இங்குதான் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் சந்தா சாகிப்புக்கமிடையே 1751 -ஆம் ஆண்டு வலிகொண்டா போர் நடைபெற்றது.
விஜயநகர மன்னர்களால் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கொங்கு நாட்டின் வரி வருவாய்களைப் பாதுகாக்கும் இடமாக விளங்கியது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலை இக்கோட்டையில்தான் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.
சிவன் மலைக்கும், சென்னிமலைக்குமிடையே ஆளும் சின்னமலை நான்
என ஆங்கிலேயர்களின் விசாரணைக் கடிதத்திற்கு துணிவுடன் பதிலனுப்பியவர் இவர். பிரிட்டிஷ் படைகளால் ஒருமுறை கூட போரில் சின்னமலையைத் தோற்கடிக்க முடியவில்லை என்பதில் இருந்தே இவரின் துணிச்சல் விளங்கும்.
இது சோழமண்டலக் கடற்கரையில் கடலூருக்கு அருகில் அமைந்துள்ள ஆங்கிலேயர் கோட்டை. மராட்டியர்களிடமிருந்து கி.பி .1690-ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இக்கோட்டையை வாங்கியிருந்தது.கி.பி .1746-இல் இக்கோட்டை தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் குடியிருப்புகள் தலைமையிடமாக விளங்கியது.
கி.பி .1756-இல் இராபர்ட் கிளைவ் இக்கோட்டையின் ஆளுநராகப் பதவி வகித்தார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.இக்கோட்டைக்கு கட்டுமான பணிகள் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று தொடங்கப்பட்டது.புனித ஜார்ஜ் பிறந்தநாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால் இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட 13 நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளது.
16. வந்தவாசிக் கோட்டைை:
- டென்மார்க் மன்னன் நான்காம் கிறிஸ்டியன், தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கனிடம் இருந்து தரங்கம்பாடியையும், சுமார் 40கி.மீ. சுற்றளவுப் பகுதியையும் குத்தகைக்குப் பெற்றான். கோட்டை ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கும், வணிகம் செய்வதற்கும் டச்சுக்காரர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.
- கடற்கரையோரமாக, தொன்மையான மாசிலாமணிநாதர் கோயிலில் இருந்து சற்றுத்தொலைவில் அப்போது கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
- டேனிஷ் மறைப்பணியாளர்களான பார்த்தலோமஸ் ஸீகன்ஃபால்க் (1682-1719), ஹெய்ன்ரிச் புளூட்சோ (1675-1752) ஆகிய இருவரும் இளவரசி சோபியா ஹெட்விகா' என்ற கப்பலில் 8 மாத காலம் பயணம் செய்து ஜூலை 9,1706, அன்று தரங்கம்பாடி கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.ஸீகன் ஃபால்கு, தமிழ்ச்சமூகத்திற்கு அச்சு எந்திரத்தையும், நூல் வெளியீட்டையும் அறிமுகம் செய்தவர். விவிலியத்தை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். முதல் பெண்கள் பள்ளியையும் அநாதைக் குழந்தைகளுக்கான முதல் காப்பகத்தையும் தொடங்கியவர். பாடநூல்களை முதலில் அச்சிட்டவர். தமிழருக்கென முதல் சீர்திருத்தக் கிறித்தவ ஆலயத்தை எழுப்பி அதில் முதன் முதலில் தமிழில் தேவ ஆராதனை நிகழ்த்தியவர்.இவ்வாறு 24 ' முதல்' சாதனைகளைச் செய்தவர். இரு அகராதிகளை உருவாக்கியவர்.
தென்னிந்தியச் சமூகம் தென் இந்தியக் கடவுளரின் வம்சாவழி ஆகிய இரண்டு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.