எம்.ஜி.ஆர் அவர்களின் சாதனைகள்:
- இவர் 1978-ல் தமிழகத்தில் 10 + 2 + 3 கல்வி அமைப்பை அறிமுகப்படுத்தினார்.
- செப்டம்பர் 4, 1978-ல் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தன்னாட்சி பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.
- இவரது ஆட்சிக்காலத்தில் 1981-ல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
- எளிய குழந்தைகள் பள்ளியில் சேர்வதை ஊக்குவிக்க இவர் 1982-ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தின் நோக்கத்தை சத்தான ஊட்டச்சத்து மதிய உணவுத் திட்டமாக விரிவுபடுத்தினார்.
- 1981, செப்டம்பர் 15-ல் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட இவர் முக்கிய காரணமாக இருந்தார்.
- 1982-ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் கொடைக்கானலில் பாரதியார் பல்கலைக்கழகமும்,அன்னை தெரசா பல்கலைக்கழகமும் ஏற்படுத்தப்பட்டது.
- இவர் 1983-இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் கட்டத்தை திறந்தார்.
- 1983-இல் கிராம நிர்வாக அலுவலர் பதவி உருவாக்கப்பட்டது.
- 1983-இல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
- கிருஷ்ணா ஆற்றில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 1983-ல் ஆந்திர மாநில அரசுடன் கூட்டு நீர் வழங்கல் திட்டமான தெலுங்கு கங்கா திட்டத்தை செயல்படுத்தினார்.