நாமக்கல் கவிஞர் பற்றிய குறிப்புகளை இப்போது நாம் பார்ப்போம்.
- இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 1888ல் பிறந்தார்.
- பெற்றோர் வெங்கட்ராமன்-அம்மணி அம்மாள்.
- தாசில்தார் அலுவலக குமாஸ்தாவாக, தொடக்கப்பள்ளி ஆசிரியராக சிறுது காலம் பணியாற்றினார்.
- 1920ல் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்று காந்தியடிகளை கண்டு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
நாமக்கல் படைத்த நூல்கள்:
- தமிழன் இதயம்.
- சங்கொலி.
- கவிதாஞ்சலி.
- தவிழ்த்தேர்.
- அவனும், அவளும்
- அன்பு செய்த அற்புதம்.
- திருக்குறள் புது உரை.
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர் நாமக்கல் கவிஞர் ஆவார்.
- தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு, அமிழ்தம் அவனது மொழியாகும், தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா இவை நாமக்கல் கவிஞர் அவர்களின் வரிகள் ஆகும்.
- வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகத்தின் போது வழிநடை பாடலாக இருந்த நாமக்கல் கவிஞரின் பாடல் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பது ஆகும்.
முனொன அவனைச் சொன்னால் மருளுதல் அவளுக்கில்லைமீன்விழி உடையான என்றால் மீனிலே கருமை இல்லை................
இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள நாமக்கல் கவிஞரின் நூல் அவனும் அவளும் ஆகும்
Tags:
TNPSC