- உலோக காலமானது செம்பு காலம் (Copper Age), வெண்கலக் காலம் (Bronze Age) மற்றும் இரும்புக் காலம் (Iron Age) என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
- புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் (Chalcolithic) எனப்பட்டது. இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
- ஆனால் கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன. ஒரு சில நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும் தொடங்கினர்.
- இதனால், செம்பு - கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன.
- பொதுவாக ஆற்றங்கரைகளிலேயே செம்பு - கற்காலப் பயன்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும்.
- தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா,துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியானவர் சமுதாயங்கள் (வேளாண்மை) தோன்றி வளர்ந்தன.
- உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார்.
- கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செய்யும் இப்பகுதியில் பயன்படுத்தப் பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
- தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- செம்பு கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக்காலமாகும். வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி அடிக்கடி குறிக்கப்படுகிறது
- தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கல் காலமும் (மெகாலிதிக்) சமகாலம் எனக் கருதப்படுகிறது. மெகாலித் என்றால் பெரிய கல் என்று பொருள். கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்களை இது குறிக்கிறது. அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
- கர்நாடகத்திலுள்ள ஹல்லூர், மாஸ்கி, ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நாகார்ஜீன கொண்டா, தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
- கல்லறைக் குழிகளில் கருப்பு - சிகப்பு வண்ணத்தாலானப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி மற்றும் அரிவாள், சிறு ஆயுதங்கள் போன்றவை காணப்படுகின்றன.
- தாமிர கற்காலத்தில் முதன் முதலில் வண்ணமிடப்பட்ட மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன.
- பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டனர்.
- காளை என்பது வழிபாட்டு சின்னமாகத் திகழ்ந்தது.
தெரிந்து கொள்வோம்:
பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
மனிதனின் தோற்றம் - 40,000 ஆண்டுகளுக்கு முன் (ஹோமோ செப்பியன்ஸ்)
வேளாண்மை தோன்றிய காலம் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்
நகரங்களின் தோற்றம் - 4700 ஆண்டுகளுக்கு முன்
இரும்புக் காலம் (கி.மு. 1500 - கி.மு. 600)
Thank you
ReplyDelete