பாரதிதாசன்:
இடுகையின் பெயர் | தொடர்புள்ளவை |
---|---|
இயற்பெயர் | கனகசுப்புரத்தினம் |
தந்தை | கனகசபை |
தாய் | இலக்குமி அம்மாள் |
புலமை | தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் |
சிறப்பு பெயர்கள் | பாவேந்தர், புரட்சிக் கவி |
பிறந்த ஊர் | புதுச்சேரி |
பிறப்பு | 29-04-1891 |
இறப்பு | 21-04-1964 |
- பாரதியார் மீது கொண்ட பற்றினால் 'பாரதிதாசன்' என மாற்றிக் கொண்டார்.
- புதுவை அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- தொடக்க காலத்தில் பாரதிதாசன் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார் பாரதியுடன் அறிமுகமாகும்போது அவர் பாடிய “எங்கெங்கும் காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா" என்ற பாடலால் அறியலாம்.
- தமிழின் மேன்மையை உணர்த்த “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்கிறார்.
- ஏழை பணக்காரர் என்ற நிலை மாற வேண்டும் என்பதனை உணர்த்த “ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ'' என்று பாடுகிறார்.
- “வாடாதப் பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ” என்று விதவை மறுமணத்திற்கு குரல் கொடுத்தார்.
- இவர் தந்தைப் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
- அறிஞர் அண்ணா அவர்களின் முயற்சியால் ரூ. 2500 பொற்கிழியும் புரட்சிக் கவிஞர் என்ற விருதும் 1946-இல் பெற்றார்.
- பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவின் போது தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.
- பாரதிதாசன் பாடல்கள் 'செக்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- இருட்டறையில் உள்ளதடா உலகம் என்று சாதிப்பற்றினைச் சாடும் வகையில் பாடினார்.
- இவரது 'பிசிராந்தையார்' நாடகம் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது.
பாரதிதாசன் படைப்புகள்
- சேர தாண்டவம்
- மணிமேகலை வெண்பா
- குடும்ப விளக்கு
- எதிர்பாராத முத்தம்
- அழகின் சிரிப்பு
- குறிஞ்சித் திட்டு
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
- இளைஞர் இலக்கியம்
- இசையமுது
- இருண்டவீடு
- பிசிராந்தையார்
- பாண்டியன் பரிசு
- படித்த பெண்கள்
- சௌமியன்
- தமிழியாக்கம்
- தமிழச்சியின் கத்தி
- இரணியன் முதலியன
பாரதிதாசன் நடத்திய இதழ்கள்
- குயில்,
- பொன்னி
ஆகிய இதழ்களை நடத்தினார்.